வித்தியாசமான போட்டிகளைத் தந்து எங்களை உற்சாகப்படுத்தியது இந்த மலர்!

வித்தியாசமான போட்டிகளைத் தந்து எங்களை உற்சாகப்படுத்தியது இந்த மலர்!

43 - ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் என் ஆருயிர் தோழி மங்கையர் மலருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி ஆசிரியராக நான் பணிபுரிந்த சமயம், குழந்தைகளோடு எனக்கு ஏற்பட்ட நெகிழ்சியான அனுபவத்தை முதன் முதலாக மங்கையர் மலருக்கு எழுதினேன். ஒருமாதம் கழித்து, அதை அச்சு வடிவில் புத்தகத்தில் பார்த்ததும் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. என்னுடன் பணி புரிந்த சக ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டியதால் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். வாசகர்கள் ஜமாய்க்கிறார்கள், டிப்ஸ், துணுக்கு என பிரசுரம் செய்து என்னை ஊக்குவித்தது எங்கள் மங்கையர் மலர் என்பதில் என்றென்றும் எனக்குப் பெருமையே…

என்னைப் போன்ற வாசகிகளுக்காகவே விதவிதமான போட்டிகள். ஒன்றா? இரண்டா? எண்ணில் அடங்காத அளவு வித்தியாசமான போட்டிகளைத் தந்து எங்களை உற்சாகப்படுத்தியது இந்த மலர். இதனால் நான் கற்றுக்கொண்ட பொது அறிவு, தன்னம்பிக்கை, சாதிக்க முடியும் என்ற மனோதிடம் என் வாழ்க்கைக்கு மிகவும் உதவியது.

நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல,  கருத்துயுத்தத்தில் வரும் இரண்டு கருத்துகளும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவே இருக்கும். கைவேலை, சமையல், கோலம், ஆரோக்கியம், ஆன்மீகம் , கவிதை என பல வண்ணங் களில் தொடுத்த கதம்ப மாலையே எங்கள் மங்கையர் மலர் என்பதில் சந்தேகமே இல்லை.  

க்யூட்டிஸ் கிளிக் பக்கத்தில் என் பேத்தியின் புகைப்படம் வந்த பொழுது வீட்டில் அனைவரும்  அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஒருவார்த்தை, அனு மேடத்தின் கேள்வி பதிலில் வரும் நகைச்சுவை, கேலி என அனைத்தும் ஆர்வத்தை தூண்டும் பக்கங்கள்.

போட்டியில் கிடைத்த பரிசுகள், புடவைகள்,சன்மானம் என அனைத்தும் குறித்த நேரத்தில் தந்து எங்களை மகிழ்வித்ததில் முதலிடம் மங்கையர் மலருக்கே...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com