மங்கையர் மலரின் தனிச்சிறப்பே அதனுடைய அட்டைதான்.

மங்கையர் மலர் என்றால் அது பெண்களுக்கு மட்டும் உரிய புத்தகம் அல்ல என் போன்ற ஆண்களும் விரும்பி படிக்கக்கூடிய ஒரு தரமான புத்தகம் என்பதை நான் ஒவ்வொரு முறை மங்கையர் மலர் படிக்கும்போதும் உணர்வேன்.
அதில் வரும் புதுப்புது ரெசிபிகளை படிக்கும்போது என் மனைவியிடம் சொல்லி இது மிகவும் நன்றாக இருக்கிறதே, எளிதாகவும் இருக்கிறதே செய்து பார்க்கலாமா என்று சொல்லி நானும் என் மனைவியுடன் சேர்ந்து பல ரெசிபிகளை செய்து ரசித்து ருசித்து இருக்கிறேன்.
மங்கையர் மலரின் தனிச்சிறப்பே அதனுடைய அட்டை தான். அதில் மிக அழகான அருமையான படங்களை போட்டு, பார்க்கும்போதே கண்டிப்பாக பிரித்து படிக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டும்படி இருக்கும். மொத்தத்தில் மங்கையர் மலர் எனக்கும் பிடித்த ஒரு புத்தகமாகிவிட்டதால் நானும் அதனுடைய வாசகன் என்று என்னுடைய அனுபவத்தினை இதில் நான் பகிர்ந்து இருக்கிறேன்.