காய்கறிகளைப் பார்த்து வாங்க சில டிப்ஸ்!

காய்கறிகளைப் பார்த்து வாங்க சில டிப்ஸ்!

முள்ளங்கி - பார்த்தாலே இது இளசு எனச் சொல்லி விடலாம். மெல்லிசாக வாங்குவது நல்லது. கிள்ளினால் தெரிந்துவிடும்.

கோவைக்காய் - சின்னச் சின்னதாக மெல்லிசாக இருக்க வேண்டும்.

பாகற்காய் - கரும்பச்சை உதவாது. இளம் பச்சையோடு மேலே நிறைய முள்ளோடு மெல்லிசாக இருந்தால் இளசு.

சௌசௌ - இதில் முள் இருக்கக் கூடாது. 'இளசு' எனக் கையில் எடுத்தாலே தெரியும்.

கோஸ் - தூக்கிக் கையில் பந்து போல உருட்டுங்கள். கனமாக இருந்தால் நல்ல கெட்டி கோஸ். உள்ளே புழு இருக்காது.

கத்திரிக்காய் - காம்பில் முள்,  அமுக்கினால் 'மெத்'... இது இளசு.

நூல்கோல் – ‘ஃப்ரெஷ்'ஷாக இருந்தால்தான் வாங்க வேண்டும். உள்ளே நீர் வற்றி விட்டால் முத்திப் போய்விடும்.

வெண்டைக்காய் - எல்லோருக்குமே தெரியும். காம்பு ஒடிந்தால் இளசு. வெள்ளை வெண்டைக்காய் சுவையாக இருக்காது.

சுரைக்காய் - நகம் வைத்து அழுத்தினால் இறங்க வேண்டும். அப்போதுதான் முத்தல் இல்லை என அர்த்தம்.

வாழைத்தண்டு - அடித்தண்டு, மேல் தண்டு இல்லாமல் நடுவிலுள்ள தண்டே நன்றாக இருக்கும்.

பீர்க்கங்காய் - முள் இருக்க வேண்டும். உடைத்துத் தின்று பார்க்க வேண்டும். கசப்புத் தட்டினால் வேண்டாம்.

வெள்ளரிக்காய் - இதையும் சாப்பிட்டுப் பார்த்து வாங்குவது நல்லது. கசப்புச் சுவை சிலதில் இருக்கும்.

ஊட்டிப் பட்டாணி - இனிப்பாக இருக்கும். தோலோடு வாங்குவது நல்லது. சின்னதாக இருந்தால் பெங்களூர் பட்டாணி. டில்லி பட்டாணி சுமாராக இருக்கும்.

தக்காளி திண்டுக்கல் - தக்காளிதான் சுவையாக இருக்கும். இது புளிப்புடன் கொளகொளவென இருக்கும். ஆனால், பெங்களூர்த் தக்காளி பார்க்கக் கவர்ச்சியாகவும், கெட்டியாகவும் இருப்பதால் அதையே எல்லோரும் விரும்புகிறார்கள். தக்காளியின் உண்மைச் சுவை திண்டுக்கல் தக்காளியில்தான் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com