
* மிக்ஸியை வோல்டேஜ் குறைவாக இருக்கும் போது பயன்படுத்தினால், மோட்டார் பழுதாகி விடும். ஆதலால் அப்போது தவிர்ப்பது நல்லது.
* தண்ணீர் தூசி போன்றவை மோட்டாரில் படாமல் பாதுகாக்க வேண்டும்.
* மிக்ஸி ஜாரில் மூன்றில் இரண்டு பங்கு பொருட்களைதான் போட்டு அரைக்க வேண்டும். இல்லாவிட்டால் பழுதாகிவிடும்.
* வேக வைத்த காய்கறிகளோ, உணவு பண்டங்களோ சூடு ஆறியதும்தான் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
* மிக்ஸி ஓடிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி திறந்து பார்க்கக் கூடாது. ஜாரின் மூடியை கையினால் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* பிளேடுகள் லூசாகி இருந்தால் கவனித்து டைட் செய்யவும்.
* மிக்ஸி பிளேடுகள் மழுங்கி விட்டால், கல்லுப்பை போட்டு அரைத்தால் கூர்மையாகிவிடும்.
* மிக்ஸியை மர ஸ்டூல் அல்லது மேஜையில் வைத்து ஓட்ட வேண்டும். பிளாஸ்டிக் ஸ்டூல் மீது வைத்து இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
* ஜார்களின் அடியில் நீர் கசிவு இருந்தால் உடனே சரி பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோட்டாரில் நீர் இறங்கி பழுதாகிவிடும்.
* அரிசி முதலிய பொருட்களை கெட்டியாக போடாமல், சிறிது நீர் விட்டு அரைத்தால்தான் பிளேடு சீராக சுழலும். சீக்கிரம் அரைத்து விடலாம். மிக்ஸியும் சூடாகாது.
* பயன்பாடு முடிந்ததும் நீர் விட்டு இரண்டு மூன்று சுற்று சுற்றினால் சுத்தம் ஆகிவிடும். பிறகு கழுவுவது சுலபம்.
* அரைக்கும் போது தடை ஏற்பட்டாலும் பொருள் ஏதும் சிக்கிக் கொண்டிருந்தாலும் மின் இணைப்பை நிறுத்தி விட்டு சரியான பின்பு மீண்டும் இயக்க வேண்டும்.
* மிக்ஸி ஜாரை மற்ற பாத்திரங்களோடு சேர்த்து கழுவ கூடாது.
* மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருளைப் போட்டு மூடியதும்தான் ஸ்விட்ச் ஆன் செய்ய வேண்டும். அதுவே பாதுகாப்பு மிக்சிக்கும் நமக்கும்.