கிராம்பு
கிராம்பு

கிராம்பு எனும் அற்புத மருந்து

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

* ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி, பேஸ்ட் செய்து, அதனுடன் ராக் சால்ட் சேர்த்து, பாலுடன் கலந்து குடித்தால் போதும், உடனடியாக தலைவலி தீரும்.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* பல்வலி, பற் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவராக விளங்குகிறது. இதில் உள்ள யூஜினால் வலி நிவாரணியாக செயல்படுகிறது

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும்.

* அலமாரிகள் போன்றவற்றில் பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால், சில கிராம்பு களை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும்.

* கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது

* கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com