இயக்குனர் ஆர்யன்கான்

மும்பை பரபர
இயக்குனர் ஆர்யன்கான்

போதைப் பொருள் வழக்கிலிருந்து வெளியே வந்துள்ள நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் (அமெரிக்கத் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்) வெப்சீரிஸ் எடுப்பதற்காக கதை ஒன்றினை எழுதி முடித்துள்ளார். விரைவில் அதை இயக்க இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதைக் கண்டு வாழ்த்து தெரிவித்துள்ள அவரது தந்தை “கனவு நனவாகி இருக்கிறது. இப்போது தைரியமாக இருக்க வேண்டுமென”க் குறிப்பிட்டுள்ளார். அதற்கு தனயன் “படப்பிடிப்பு தளத்துக்கு உங்கள் திடீர் வருகையை எதிர்பார்க்கிறேன்” என பதில் கூறியுள்ளார்.

தந்தையின் ‘ரெட் சில்லீஸ்’ தயாரிப்பு நிறுவனம் இதைத் தயாரிக்க உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com