
பிரதட்சணம் என்பது இந்து சமயக் கோயில்களையும், இறைவனையும் பக்தியோடு வலம் வருகின்ற முறையாகும்.
* பிரதட்சண முறையில் அங்கப் பிரதட்சணம், அடிப் பிரதட்சணம், சோம சூக்தப் பிரதட்சணம், வேப்பிலை ஆடை பிரதட்சணம், கரும்பு தொட்டில் பிரதட்சணம் என்று பல வகைகள் உள்ளன.
* பிரகாரத்தை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்னென்ன பலங்கள் என்று தெரிந்து கொள்வோமா?
மூன்று முறை - விரும்பிய காரியம் நிறைவேறும்
ஐந்து முறை - காரிய வெற்றி
ஏழு முறை - நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி
ஒன்பது முறை - குழந்தைப் பேறு
பதினொரு முறை - ஆயுள் விருத்தி
பதினைந்து முறை - செல்வம் பெருகும்
108 முறை - அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.
1008 முறை - விரும்பிய பெண் மனைவியாகக் கிடைப்பாள்.
* "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்" என்ற பழமொழி அடித்துக் கொள்வதைக் குறிப்பதல்ல.. கோவிலில் அடி பிரதட்சணம் செய்வது வாழ்வில் வெற்றி பெற உதவும் என்பதே ஆகும்.
* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
* தினமும் அரசமரம் சுற்றுவதன் பலன்கள்:
ஞாயிறு - நோய் அகலும்
திங்கள் - சுப நிகழ்வு கைகூடும்
செவ்வாய் - வெற்றி கிட்டும்
புதன் - தொழில் வளர்ச்சி அடையும்
வியாழன் - கல்வி, ஞானம் வளரும்
வெள்ளி - சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
சனி - வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வாள்
சனிக்கிழமை மட்டும் அரசமரத்தை தொட்டு வணங்கலாம். இதர நாட்களில், சற்று தள்ளி வலம் வரலாம். பகல் நேரத்தில் மட்டும் வலம் வருதல் நன்று.
* காஞ்சி கையிலாயநாதர் ஆலய கருவறையைச் சுற்றி, மார்பாலேயே ஊர்ந்து செல்லும்படியாக ஒரு பிரகாரம் அமைந்துள்ளது. இதனை அவ்விதம் வலம் வருபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். இதனை 'சொர்க்கப் பிரதட்சணம்' என்று கூறுவர்.