நடிகர் சிவக்குமார்
நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் தன் பிள்ளைகளிடம் சொன்ன அறிவுரை என்னவென்று தெரியுமா?

Published on

2009 ஜூலை மாதம் மங்கையர்மலர் இதழில் வெளிவந்த கிராமாயணம் பகுதியில் அவர் சொன்னது:

"கோவை மாவட்டத்துல, ‘கலங்கல்’ங்கிற ஊரில் படிச்சேன். ஜி.டி. நாயுடு பிறந்த ஊர். ரொம்ப ஏழ்மையான அந்தக் கிராமத்துல, ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழ்ந்தோம்.

பள்ளிக்கூடத்துக்கு பல மைல்கள் நடந்தே போனேன். சைக்கிளைக் கண்ணால கண்டதே பதினோராம் வகுப்புலதான். அதுவும் ஃப்ரேமெல்லாம் உடைஞ்சுப் போய், பல இடங்களில் பத்த வெச்ச பழைய சைக்கிள்.

என் பிள்ளைகள்கிட்ட ‘உங்க அப்பன் அடி மண்ணுல இருந்து பிளாட்ஃபாரம் வரைக்கும் கஷ்டப்பட்டு வந்திருக்கேன். நீங்க அந்த பிளாட்ஃபாரத்து மேலே நிக்கிற சிலையா இருக்கணும்’னு சொல்வேன்.

இன்னிக்கு என் பிள்ளைகளும் எளிய பழக்கங்களும், உயர்ந்த சிந்தனைகளும் ஆக முன்னுக்கு வந்திருக்காங்க. அதுக்குக் காரணம் என்னுடைய கிராமம் எனக்குத் தந்த மதிப்பீடுகள்தான்!"

80 வருட பாரம்பரிய கல்கி குழும இதழ்களைக் 'களஞ்சியம்' பகுதியில் படித்து மகிழலாம்! https://kalkionline.com/subscription

logo
Kalki Online
kalkionline.com