தண்ணீருக்குள் இருக்கும் ஜர்னி நரசிம்மர்!

தண்ணீருக்குள் இருக்கும் ஜர்னி நரசிம்மர்!

ஜர்னி நரசிம்மர் என்பது கர்நாடக மாநிலம் பீதர் அருகே உள்ள ஒரு குகைக் கோயிலாகும். இது நரசிம்மருக்கு அமைக்கப்பட்ட கோயிலாகும். இந்த தொன்மையான கோயில் நகரிலிருந்து சுமார் 4.8 கிமீ தொலைவில் உள்ளது. இது 300 மீட்டர் நீண்ட குகையில் அமைந்துள்ளது இது மனிச்சூலா மலைத்தொடரின் கீழ் உள்ளது. குகைக் கோயிலானது ஒரு நீண்ட சுரங்கம் போன்ற குகையில் அமைந்துள்ளது. இக்குகைச் சுரங்கமானது பல நூறு அடிகள் நீண்டு உள்ளது.

மேலும் குகைச் சுரங்கத்தில் நான்கு அடி உயரத்திலிருந்து ஐந்து அடி உயரம் வரை தண்ணீர் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் மார்பு வரை உள்ள இந்த நீரில் நடந்துதான் செல்ல வேண்டும். நரசிம்மரும் மார்பளவு தண்ணீரில்தான் காட்சி தருகிறார். கோடை காலங்களிலும் இங்குள்ள நீரின் அளவு துளி கூட குறைவதே இல்லயாம்.

குகைக் கோவிலின் முடிவில் இரண்டு தெய்வங்கள் உள்ளன அவை - நரசிம்மர் மற்றும் ஜலாசுரன் வழிபட்ட சிவலிங்கம் ஆகும். குகையின் முடிவில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய எட்டு பேர் நின்று தரிசிக்க இயலுமளவுக்கே சிறியதாக இடம் உள்ளது. தரிசனத்துக்கு சென்றவர்கள் திரும்பும்வரை மற்ற பக்தர்கள் குகை வழியில் உள்ள நீரில் நின்றபடி காத்திருக்க வேண்டும்.

* குழந்தை வரம் வேண்டி இந்த நரசிம்மரை, வணங்கினால் நிச்சயம் பலன் உண்டு என்பது ஐதீகம்.

* இன்னும் சிலர், பிரகலாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ததாகவும், அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்றும், இந்த குகையில்தான் அவன் தவம் செய்து சிவனை வழிபட்டதாகவும், நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர் இந்த குகையில் அவன் ஜலமாக (நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்ததாகவும், அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்றும் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com