திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராமர் பற்றிய சில தகவல்கள்!

திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராமர் பற்றிய சில தகவல்கள்!

திருமாலின் ஆறாவது அவதாரமும், ஜமதக்னி முனிவரின் மகனுமான பரசுராமர் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.

சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் பிரகாரத்தில் சப்த கன்னிமார் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றனர். அவர்களுக்கு இரு புறங்களிலும் பரசுராமரும் அவரது தந்தை ஜமதக்னி முனிவரும் காட்சி தருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள வேகா மங்கலத்தில் உள்ள சிவன் கோவிலில் பரசுராமர் வழிபட்டதால், ஈசன் பரசுராமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

திருக்கோவிலூர் திரி விக்ரமன் கோவிலில் பரசுராமர் தவம் புரிந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

கேரள நாடு பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்பதால் அதற்கு பரசுராம சேத்திரம் என்றும் பெயர் உண்டு.

பரசுராமர் நிறுவிய தேவி தலங்கள் ஐந்து. அவை :

கொல்லூர் - மூகாம்பிகை

வடகரா - அம்பிகா

பாலக்காடு - ஹேமாம்பிகா

கொடுங்கல்லூர் - மகா பகவதி

கன்னியாகுமரி - பாலாம்பிகா

இந்த ஐந்து சக்தி தலங்கள் பஞ்சபகவதி க்ஷேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com