கிருபானந்த வாரியாரின் உரையில் கவர்ந்த சில விஷயங்கள்!

கேட்டேன் ரசித்தேன் / படித்தேன் ரசித்தேன்
கிருபானந்த வாரியாரின் உரையில் கவர்ந்த சில விஷயங்கள்!
Published on

கேட்டேன் ரசித்தேன்

கிருபானந்த வாரியாரின் உரையில் இருந்து:

* மாணவப் பருவம் என்பது வாழ்க்கையின் அஸ்திவாரம் ஆகும். மாணவர்களுக்கு அடக்கம், குரு பக்தி இரண்டும், பறவைகளுக்கு இரு சிறகுகள், மனிதர்களுக்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள், ரயிலுக்கு இரண்டு தண்டவாளங்கள் இருப்பது போல அரிய குணங்கள் அவசியம்.

* கண்ணால் காண முடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பில் உள்ள உயிரை நாம் எப்போதேனும் கண்டதுண்டா? அதனால் நாம் உயிர் இல்லாதவர் என்று யாரேனும் கூற முடியுமா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைகின்றன என்பதில் சந்தேகம் என்ன?

* துன்பம் வரும் காலத்தில் தான் உற்றார் உறவினரின் அன்பை தெரிந்து கொள்ள முடியும். நமக்கு வரும் துன்பம்தான் உறவினரையும், நண்பர்களையும் அளக்கும் அளவுகோல். ஆதலால் துன்பத்திலும் ஒரு பலன் உள்ளது என்று அறியலாம்.

* மனதால் செய்யும் பாவங்களை அரசாங்கத்தால் கண்டுபிடித்து தண்டிக்க முடியாது. ஆனால் அவற்றிற்கு தெய்வ தண்டனை நிச்சயம் கிடைக்கும்.

*********

* சொத்து விவகாரம், குடும்பத்தார் பற்றிய ரகசியம், மந்திரம், மருந்து, செய்த தானம் போன்றவற்றை பகிரங்கமாக சொல்வது கூடாது.

* துணி, நகைகள், மாலை, சந்தனம், மருந்து ஆகியவற்றை இறைவனுக்கு அர்பணித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

* ஒருவர் இதுவரை முன்னேறவில்லை என்றால், அவர் நல்லவர்களோடு இன்னும் பழகவில்லை என்று அர்த்தம்.

* சுகமாக வாழும்போதே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும், ஏனெனில், வாழ்வும், தாழ்வும் மனிதருக்கு மாறி மாறி வரும்.

- கிருபானந்த வாரியார்

.

படித்தேன் ரசித்தேன்

* தெய்வ பக்தி உண்மையானால் பரோபகாரம் அங்கே இருக்கும். அது இல்லாத இடத்தில் தெய்வ பக்தி என்பது வேஷம்தான். - பாரதியார்

* பக்தி என்பது தெய்வத்தை நம்புதல். குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி கணவனை நம்புவது போலவும், பார்க்கும் பொருளை கண் நம்புவது போலவும், தான் தன்னையே நம்புவது போலவும் தெய்வத்தை நம்புதல் வேண்டும். - பாரதியார்

**********

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com