வீட்டின் பூஜையறையில் செய்யக்கூடாத சில விஷயங்கள்!

வீட்டின் பூஜையறையில் செய்யக்கூடாத சில விஷயங்கள்!

👉 ஒவ்வொருவருடைய பூஜையறையும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருக்கும். வீட்டின் பூஜையறை என்பது நமக்கு வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அறையாகவும் இருக்கிறது.

👉 நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பதை உணர வேண்டும். அதற்கு உங்களுடைய பூஜையறையில் சில விஷயங்களை சரியாக கடைபிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

👉 நமக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் நேராக பூஜையறைக்கு தான் செல்கிறோம். அந்த வகையில் பூஜையறையில் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? மற்றும் செய்ய வேண்டிய சில தகவல்களை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

👉 பூஜையறையில் கோமதி சக்கரம் வைப்பவர்கள் 11 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். அதற்கு குறைவாக வைக்கக்கூடாது.

👉 பூஜையறையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பொருளாக கண்ணாடி இருக்கிறது. கண்ணாடி இல்லாமல் பூஜை செய்யாதீர்கள்.

👉 பூஜையறையை எப்போதும் பளிச்சென்று வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். பூஜையறையாக இல்லாமல் ஸ்டாண்டில் வைத்திருந்தால் கூட இருள் சூழ்ந்த நிலையில் ஒருபோதும் இருந்து விடக்கூடாது.

👉 கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.

👉 வீட்டில் சாமி படத்திற்கு நிவேதனம் வைக்கும் பொழுது, எச்சில் பட்ட பாத்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. அதற்கென்று தனியாக பாத்திரத்தை வைத்திருப்பது சிறந்தது.

👉 வீட்டிலிருந்து கோயிலுக்கு செல்லும் பொழுது வாசலில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றி விட்டு தான் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

👉 முழு மலரால் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும்.

👉 வீட்டில் சுவாமி படங்களுக்கு சாற்றப்படும் பூக்களை சருகாகும் வரை அப்படியே விட்டுவிடக்கூடாது. அது போல் காய்வதற்கு முன்பே எடுத்து விடவும் கூடாது. மலர்கள் காயும் முன்பு எடுப்பதும், காய்ந்து சருகாகும் வரை படங்களில் விட்டு வைப்பதும் துரதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

👉 பூஜையில் வைக்கப்படும் வெற்றிலையை காம்பை கிள்ளி விட்டு தான் வைக்க வேண்டும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

👉 வெறும் வெற்றிலையை மட்டும் எக்காரணம் கொண்டும் வைக்கக்கூடாது. வெற்றிலையுடன் பாக்கு மற்றும் பூ கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com