சுவையான குருமாவுக்கு சில டிப்ஸ்!

சுவையான குருமாவுக்கு சில டிப்ஸ்!

தற்போதைய காலகட்டத்தில் நூடுல்ஸ், பீட்ஸா என பாஸ்ட் புட் உணவுகளை நோக்கி மக்கள் பயணித்தாலும், இன்றும் எல்லோருக்கும் பிடித்த சமையல் டிஷ்களில் குருமாவுக்கு தனி பங்கு உண்டு. அந்தவகையில், குருமா செய்வதற்கான சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

* குருமாவில் நீர் அதிகமாகி விட்டால், சிறிது பொட்டுக்கடலை மாவு கலந்தால் பதம் ஆகிவிடும்.

* அன்னாசிப்பூ கடல்பாசியை நெய்யில் தாளித்து, இரண்டு மூன்று பல்லை வதக்கி போட்டால் குருமா மணக்கும்.

* குருமாவில் தேங்காய்க்கு பதிலாக சர்க்கரை வள்ளிக் கிழங்கை கரகரப்பாக அரைத்து சேர்க்கலாம்.

* வடை, போண்டா மீதமானால் உதிர்த்து, எண்ணெய் விட்டு, வறுத்து குருமா செய்யலாம்.

* குருமாவில் உப்பு கூடி விட்டால், ஒரு உருளைக்கிழங்கை வேக வைத்து சேர்த்தால் சரியாகிவிடும்.

* குருமாவுக்கு மசாலா பொருட்களுடன், தக்காளியும் சேர்த்து அரைத்து செய்தால், குருமா பதமாக வரும்.

* சாம்பார் வெங்காயம் எப்போதும் சமையலுக்கு நல்லது என்பதால் முடிந்தவரை அதையே பயன்படுத்துங்கள்.

* காய்கறிகளை பொடியாக நறுக்கி குருமாவில் சேர்த்தால், குழந்தைகள் தவிர்க்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

* தாளித்து இறக்கும் போது தண்ணீர் விடும்போது சற்று தாராளமாக விடலாம். இல்லையென்றால் குருமா அடிப்பிடித்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com