வீட்டிலேயே சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமா?
இந்தியாவில் பல இடங்களில் மிகவும் பிரபலமாக கொண்டாடும் விழாக்களில் பசந்த் பஞ்சமியும் ஒன்று ஆகும். இது பருவகாலத்தில் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
இவ்விழாவானது பஞ்சாப் மாநிலத்தில் வாழும் இந்து மக்கள் மிகவும் பெரிய அளவில் விஷேச பூஜையாக செய்வார்கள். இதன் நோக்கம், மக்கள் அறிவு, இசை, கலை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் சரஸ்வதி தேவியின் நல்லாசி பெற வேண்டும் என்பதே ஆகும்.
ஆகவே, இம்மாதிரியான பூஜைகள் செய்யும் போது நல்ல தூய மனதோடு வணங்கினால், சரஸ்வதியின் முழு ஆசியும் கிடைக்குமென நம்புகின்றனர்.
வீட்டில் உள்ள ஒவ்வோரு அறையிலும் மயில் இறகை வைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அது அந்த அறையில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை தடுக்கிறது.
ஒரு செம்பு பாத்திரத்தில் பச்சை கற்பூரம், வெண்தாமரை இதழ் கொண்டு மந்திரம் சொல்லி ஜெபிக்கப்பட்ட தீர்த்தத்தைப் பச்சை நிறப் போர்வை அல்லது துண்டில் தெளித்து, அதில் அமர்ந்து குழந்தைகள் படிப்பதன் மூலம் நினைவாற்றலும், கல்வியில் நாட்டம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
இதுபோன்ற செயல்களை புதன்கிழமை மற்றும் பௌர்ணமிகளில் செய்து வர நிறைவான பலனைப் பெறலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் என அனைவரும் இதனை செய்வதன் மூலம் நற்பலன்களை பெறலாம்.
வீட்டில் கல்வி, அறிவு, இசை, அறிவியல், கலை, தொழில்நுட்பம் ஆகிய அனைத்துக்கும் அதிபதியாக விளங்கும் சரஸ்வதி தேவியின் வெள்ளை நிறம் கொண்ட புகைப்படத்தை வைத்திருப்பது மிகவும் நல்லதாகும்.
மேலும் வீணையுடன் கூடிய சரஸ்வதி தேவி படம் மற்றும் சரஸ்வதியின் வாகனமாக இருக்கும் வாத்து போன்ற படங்களை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நற்பலனை தரக்கூடியதாகும்.
சரஸ்வதி தேவிக்கு விஷேசமாக கொண்டாடப்படும் பசந்த் பஞ்சமி நாளன்று சரஸ்வதியின் மந்திரங்களை உச்சரித்து வந்தால், நம்மை எப்போதும் தீய சக்திகள் தீண்டாது.