எந்தெந்த நோய்க்கு எந்தெந்த அம்மனை தரிசிக்கலாம்!

எந்தெந்த நோய்க்கு எந்தெந்த அம்மனை தரிசிக்கலாம்!

* தலைவலியால் அவதிப்படுபவர்கள், நாகர்கோவில் அருகே உள்ள மண்டைக்காடு தலத்தில் உள்ள பகவதி அம்மனுக்கு, சர்க்கரை பச்சரிசி மாவு வெள்ளம் சேர்த்து மண்டை அப்பம் செய்து நைவேத்தியம் செய்தால் தலைவலி தொல்லை தீரும்.

* கும்பகோணம் அருகே உள்ள திருந்து தேவன் குடியில் உள்ள கற்கடேஸ்வரர் அருமருந்தம்மை கோவிலில் அம்மன் புற்றுநோய் தீர்த்து அருளுகிறார். பெயரிலேயே மருந்து உள்ளதே... இங்கு பிரசாதமாக தரப்படும் எண்ணையை தடவிக் கொண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

* சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் எழுந்தருளியுள்ள கண்ணாத்தாள் அம்மன் பார்வை இழந்த பக்தர்களுக்கு பார்வை கிடைக்க அருள்கிறாள்.

* சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள எல்லையம்மனுக்கு சர்க்கரை காப்பு செய்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

* திருவிடைமருதூரில் கோவில் கொண்டுள்ள வனதுர்கா பரமேஸ்வரி அம்பிகை, கர்ப்பத்தடைகள் நீங்கி குழந்தை பெற அருள் செய்கிறாள்.

* சங்கரன்கோவில் கோமதி அம்மன் முன் உள்ள ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனநோய் தீர்கிறது.

* சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் எழுந்தருளியுள்ள கடும்பாடி சின்னம்மனிடம் உப்பு, மிளகு செலுத்துவதாக வேண்டிக் கொண்டால் சரும நோய்கள் நீங்கும். அம்மை நோய் நீங்க, கோவில் கருவறையில் தரப்படும் சங்கு தீர்த்தம் அருமருந்தாகும்.

* திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பப்பை சம்பந்தமான பிணி தீர அருள்கிறாள்.

* திருச்சி சமயபுரம் மாரியம்மன், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன், சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் முதலிய பல அம்மன்கள் கண்பார்வை கோளாறுகள் நீங்க அருள் புரிகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com