
அங்காடி பொருட்கள்
விலையில்லா உபகரணங்கள்
பெறுவதிலும்...
ஏறுவரிசை இறங்குவரிசையில்
பேருந்து நிலையத்தில்
முண்டியடிப்பதிலும்...
விதிகளை மீறி
சிக்னலில் சிட்டாக
பறக்கத் துடிப்பதிலும்...
அறிவித்த விநாடி ஆஃபர் பெற
செல்லும் காதும்
இணை பிரியாதிருப்பதிலும்...
அவசர பயணத்தை
விரும்பும் நாம்
விரும்பாதிருப்பது
அவசர மரணம் மட்டுமே!