Virathamum Unavum
Virathamum Unavum

விரதமும் உணவும்!

nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

Navarathiri
Navarathiri

ன் மாமியார் நவராத்திரியின்போது ஒன்பது நாட்களும் ஒன்பது புடவையைச் சாற்றி அம்பாளுக்கு பூஜை செய்வார். அதனால் காலையில் எதுவும் சாப்பிடாமல் எட்டு மணிக்கு எல்லாம் பூஜையை தொடங்கி விடுவார்.  வடை, பாயாசம் என்று தினமும் ஏதேனும் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்துவிட்டு மனம் நிறைய பூஜையும் முடித்துவிட்டு அன்று நெய்வேத்தியம் செய்த அந்த பாயசம், வடையும் மட்டுமே சாப்பிடுவார்.  எப்போதும் அம்பாளின் பெயரை பூஜித்துக்கொண்டிருப்பதால், பசி என்பதே அறியாமல் விரதம் இருப்பது மன நிறைவு தருவதாக சொல்லுவார்.  மாலை விரதம் முடிக்கும்போது கொலுவுக்காக செய்த சுண்டலை சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்துவிட்டு அதில் ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டு அவருடைய விரதத்தை முடித்துக்கொள்வார்.  சுண்டல்களில் நல்ல புரோட்டீன் இருப்பதால் சத்து நிறைந்ததாக அமைந்து, அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்தது. 

- லக்ஷ்மி ஹேமமாலினி

ன் அம்மா தேவி உபாசகர். அதனால் கண்டிப்பாக நவராத்திரியின்போது விரதம் இருப்பார். அதற்காக முழு பட்டினியாக இருக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை எலுமிச்சம்பழம் ஜூஸ் அல்லது காபி, மோர் போன்றவற்றை குடித்துக்கொண்டிருப்பார். கடைசியில் விரதம் முடிந்து சாப்பிடும்போது முதலில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு அரை மணி நேரம் கழித்து தனக்கு பிடித்த உணவை சாப்பிட்டு அன்றைய விரதத்தை முடித்துக்கொள்வார். 

 - பிரகதா நவநீதன்

வராத்திரி என்றால் விரதம் இருக்க  வேண்டும் என்பதே இல்லை. சுமங்கலி பெண்கள் வயிற்றைக் காய போடக்கூடாது என்று என் பாட்டி, அம்மா எல்லோரும் சொல்வார்கள். அதனால் நான் சாப்பிட்டுவிட்டுத்தான் மாலை கொலுவுக்கு தேவையான வேலைகளை செய்வேன். எந்தக் கடவுளும் வயிற்றை பட்டினி போட்டுவிட்டு, எனக்காக விரதம் இருந்து, என்னை கும்பிடுங்கள் என்று சொல்லவில்லை. எனக்கு தெரிந்த என் தோழி ஒருத்தி காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாமல் மாலை கோயிலுக்கு செல்ல, அங்கே மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டாள் . பிறகு ஆஸ்பத்திரி என்று அவளுக்கு அதிகமாக செலவு வந்துவிட்டது. நம் உடம்பு ஒத்துக்கொண்டாலே ஒழிய நாம் விரதம் இருப்பது சிறந்ததல்ல, அவசியமும் அல்ல. அப்படியே விரதம் இருப்போர், தங்கள் விரதத்தை முடிக்கும்போது திட ஆகாரத்திற்கு பதில் முதலில் திரவ ஆதாரத்தை சாப்பிட்டு விட்டு பத்து நிமிடங்கள் கழித்து ஏதேனும் திடமாக சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும்.

- நந்தினி கிருஷ்ணன்

க்ஷனின் மகளாய்ப் பிறந்த பார்வதிதேவி, சிவபெருமானை மணமுடிக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அந்நாட்களில் பழங்களை உணவாக உண்டார். பின்  அதையும் தவிர்த்து வில்வ இலைகளை சிறிது உண்டு வந்தார். இறுதியில் சிவனின் கரம் பற்றினார். நவராத்திரி நாட்களில் கடுமையான விரதம் இருந்து, துர்காதேவியைப் பூஜிப்போருக்கு வேண்டும் வரம் தந்து, அனைத்து நலன்களும் வழங்கலானார் தேவி. இவ்விரதம் கடைப்பிடிக்கும் நான்,  சாயங்கால பூஜைக்குப்பின், சாமை அரிசியில் சில காய்கள், கல்உப்பு சேர்த்து வெங்காயம் பூண்டு தவிர்த்து, கிச்சடி செய்து சாப்பிட்டு ஒரு கப் லஸ்ஸி அருந்துவது வழக்கம்.

- ஜெயகாந்தி மகாதேவன்

வராத்திரி விரதம் இருக்கும்போது ஒன்பது நாட்களும் பூஜை முடியும்வரை எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பசிப்பதுபோல் இருந்தால் பால் அல்லது ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை மட்டுமே அதுவும் மாலையில் பூஜை முடிந்து கன்யா பெண் களுக்கும், சுமங்கலிகளுக்கும்  தாம்பூலம் கொடுத்தபிறகு அரிசி, கோதுமை உணவுகளை தவிர்த்து இரவில் ஜவ்வரிசி உப்புமா அல்லது அவலை களைந்து சிறிது பால், வெல்லம், ஒரு துண்டு வாழைப்பழம் சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் பச்சைப் பயறை 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து தோசையாக வார்த்து  சாப்பிடலாம். அம்பாளுக்கு சுண்டல் நைவேத்தியம் செய்து அதையே உணவாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் எங்களுக்கு வழிவழியாக வந்துள்ளது.

-கே.எஸ். கிருஷ்ணவேணி

"விரத நாட்களில், தினம் ஒரு சிறுதானிய பாயசம், வெல்லம் சேர்த்து தயார் செய்வேன். நிறைய பால் விட்டு வேக விடுவேன். பின்னர், நெய்யில் திராட்சை. முந்திரி வறுத்துப் போட்டு. ஏலக்காய் பொடித்துப் போட்டு, சுவாமிக்கு நைவேத்தியம் செய்து (அம்பாள், பாயசான்னப் பிரியை அல்லவா) பின் அதை சாப்பிட்டு  விரதம்  முடிப்பேன். ஒரு சில நாட்களில், பாயசத்திற்கு பதிலாக முளை கட்டிய பச்சைப் பயரோடு  கொஞ்சம் பனீர் துண்டுகள், சிறிதளவு பழத் துண்டுகள் கலந்து அம்பாளுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு  பின்னர் அதை  சாப்பிடுவேன். அல்லது,  வெவ்வேறு தானியம், விதவிதமான காய்கள் என கலந்து சலாட் மாதிரி சாப்பிடுவேன். சத்தான, எளிதில் செய்யக் கூடிய, வயிறு நிறையக் கூடிய உணவு இது!

-ரேவதி வாசுதேவன்

வராத்திரி பண்டிகை ஒன்பது நாட்களும் அதிகாலை குளித்துவிட்டு, தினமும் அம்பாளுக்கு அஷ்டோத்திரம் சொல்லி பூஜை செய்வேன். பூஜை முடிந்ததும் தினமும் ஒரு கலந்த சாதம் என்ற வகையில் நைவேத்தியம் செய்வேன். அந்தப் பிரசாதத்திலேயே கொஞ்சம் நானும் சாப்பிடுவேன்.

மாலை வேளையில் விளக்கு ஏற்றி… அம்பாள் பாடல்கள் பாடி ஏதேனும் ஒரு வகை சுண்டல் செய்து, நைவேத்தியம் பண்ணுவது வழக்கம். முளை கட்டிய பயறு வகைகளில் சுண்டல் செய்தால் சத்துக்கள் அதிகம் கிடைக்கும். ஒரு கப் சுண்டலுடன் ஒரு தம்ளர் மோர் மட்டும் இரவு உணவாக எடுத்துக்கொள்வேன்.

தேவை என்றால் வாழைப் பழம், மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்களைக் கொஞ்சம் சாப்பிடலாம்.

ஆக மொத்தம் இந்த ஒன்பது நாட்களும், நம் எண்ணம் முழுக்க பக்தி உணர்வுடன், சாத்வீக உணவு மட்டும் உண்டு… விரதம் இருந்தால்… கண்டிப்பாக நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

- ஜெயா சம்பத்

Virathamum Unavum
Virathamum Unavum

விரதம் என்பது நாம் வெகு நேரம் வயிற்றில் ஒன்றும் சாப்பிடாமல் காலியாக வைத்துக்கொண்டு பிறகு சாப்பிடுவது. அதனால் விரதம் முடிந்து, எளிதில் ஜீரணமாக  கூடிய உணவாக சாப்பிட வேண்டும். பால், பழம் போன்றவற்றை சாப்பிடும்போது நிச்சயமாக எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.  சப்பாத்தியுடன் நல்ல கூட்டு செய்து சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  எல்லா தானியங்களும் போட்டு செய்த மாவினை கஞ்சி செய்து குடித்தாலும் நல்லது. இதையே நான் பின்பற்றுகிறேன்.

-உஷாமுத்துராமன்

இதையும் படியுங்கள்:
நவீன நவராத்திரி!
Virathamum Unavum

வராத்திரியின் வெவ்வேறு நாட்களில் மக்கள் துர்கா தேவியை அவளது ஒன்பது வடிவங்களுடன் வழிபடுகிறார்கள். நவராத்திரியின்போது விரதம் இருப்பவர்கள், பூஜைகள் செய்து விரதம் முடிந்ததும் சாத்விக் உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். நவராத்திரி விரதத்தின்போது சாப்பிடக்கூடிய உணவுகளான சிங்கரே கே அட்டே கா சமோசா, சபுடனே கி கிச்சடி, ஆலு கி டிக்கி,  வால்நட் லஸ்ஸி, பச்சை பயிர்கள், பழங்கள் போன்றவை நவராத்திரியின்போது சாப்பிட வேண்டும்.

-முத்து லக்ஷ்மி

வராத்திரி விரதம் முடிந்த உடன் முதலில் பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடித்து விட்டு பச்சரிசியில் சர்க்கரை பொங்கல் வைத்து சாப்பிட வேண்டும். பின்னர் சத்துள்ள சாத்துக்குடி, மாதுளை, திராட்சை எலுமிச்சை இவற்றை ஜீஸ் செய்து குடிக்கலாம். நட்ஸ் வகையான முந்திரி, கிஷ்மஸ், பாதாம், மற்றும் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். 

பிறகு சாப்பாட்டுடன் நல்ல சத்துள்ள காய்கறிகளை சமைத்து சாப்பிடலாம். மாலையில், சிறு பயறு, பெரும் பயறு, கொண்டை கடலை இவற்றை வேக வைத்து சாப்பிடலாம். 

-வி. கலைமதிசிவகுரு

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com