மார்பக புற்றுநோய்க்கு காரணங்களாக ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

அக்டோபர் 13 -மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!
மார்பக புற்றுநோய்க்கு காரணங்களாக ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

வ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும்,  அக்டோபர் 13ஆம் தேதி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாகவும்  கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருந்தால், உங்களுக்கும் அது இருக்கலாம். தாய் அல்லது சகோதரி போன்ற நெருங்கிய உறவினருக்கு புற்றுநோய் இருந்தால் உங்களுக்கும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.

மாதவிடாய் ஆரம்பத்தில், தாமதம், விரைவான மாதவிடாய் நிறுத்தம் அல்லது குழந்தை இல்லாமை போன்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்  உள்ளது. மகப்பேறு மற்றும் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக செல்களின் அடர்த்தி அதிகரிக்கிறது. அதனாலேயே அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள்

வாழ்க்கை முறை காரணிகளும் மார்பக புற்றுநோயின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கின்றன.  இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. மேலும்  அளவுக்கு அதிகமாக குடிப்பது, உடல் பருமன், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடல் உழைப்பு இல்லாதது ஆகியவை மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. தூக்க  குறைபாடு உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வாய்ப்பு வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மருத்துவ ஆய்வாளர்கள்.

அடிக்கடி தலைக்கு ஹேர் டையை அடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 14 சதவீதம் அதிகரிக்கிறது என்கிறார்கள் லண்டன் பிரான்சிஸ் கிரேஸ் மருத்துவ மனையின் ஆராய்ச்சியாளர்கள். வருடத்திற்கு பெண்கள் 2 முதல் 5 முறை மட்டுமே தங்களது தலைக்கு ஹேர் டையை அடிக்கலாம் அதற்கு மேல் என்றால் அது ஆபத்து தான் என்கிறார்கள்.

பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் வாசனை திரவியங்களில் அலுமினிய உப்புகள் சேர்க்கப் படுகின்றன. அதனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் ஓர் ஆய்வில்.

தினமும் இரண்டு கப்பிற்கு மேல் பால் குடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா லோமாலிண்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

அடிக்கடி இனிப்பு பானங்களை குடிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் அமெரிக்காவின் ஹார்வர்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள்.

மார்பக புற்றுநோயைத் தடுக்க ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். அதாவது பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சரிவிகித உணவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும்.

ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதோடு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் செயல்பாடு மார்பக புற்றுநோயின் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. இதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். எடையை கட்டுக்குள் வைத்திருங்கள். உடல் பருமன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

தற்போது பல தாய்மார்கள் பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. தாய்ப்பால் ஊட்டுவது குழந்தைக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நன்மை பயக்கும். ஆம், தாய்ப்பால் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

குடும்ப வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் மார்பகப் புற்றுநோயின் வரலாறு இருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையான சோதனைகளை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com