இளம் பெண்களே! தனியே வெளியில் செல்லும் வழக்கம் உண்டா? இத முதல்ல படிங்க!

இளம் பெண்களே! தனியே வெளியில் செல்லும் வழக்கம் உண்டா? இத முதல்ல படிங்க!

"அச்சமில்லை அச்சமில்லை" என உதடுகள் உச்சரித்தாலும் ஒரு இளம்பெண் தனியாக செல்லும்போது, தனது தற்காப்புக்காக பல பாதுகாப்பு முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும் தேவையானால் சரியான நேரத்தில் அவற்றை பின்பற்றுவதும் அவசியமாகிறது. அவர்களுக்கான சில ஆலோசனைகள் இங்கு.

1. எந்த ஒரு இடத்திலும் ஆட்கள் இல்லாமல் தன்னந்தனியே நீண்ட நேரம் இருக்காதீர்கள்.

2. கைப்பைகளை உங்கள் தோளில் அலட்சியமாக தொங்கவிட வேண்டாம். உங்கள் நெஞ்சோடு இரு கைகளாலும் பையை அணைத்தவாறு செல்லுங்கள்.

3. கைப்பையில் எப்போதும் ஆபத்துக்கு உதவும் சிறிய பிளேடு, கத்தி, மிளகாய் தூள், மிளகு ஸ்பிரே போன்றவைகளை சட்டென எடுக்கும்படி வைத்திருங்கள்.

4. கழுத்தில் பளிச்சென தெரியும் சங்கிலி போன்றவைகளை அணியாதீர்கள். கவரிங் என்றாலும் அவற்றை  சேலைத் தலைப்பு அல்லது துப்பட்டாவினால்  மூடிக்கொள்ளுங்கள்.

5.கண்களில் பயத்தையும் நடையில் தயக்கத்தையும், தனியே செல்கிறோம் என்ற பதற்றத்தையும் தவிருங்கள்.

6. நீங்கள் செல்லவிருக்கும், சென்று கொண்டிருக்கும் இடம் பற்றிய பொதுவான தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.

7. நின்று கொண்டிருக்கும்போதும், பயணத்தின்போதும் யாரேனும் அனாவசியமாக அதிக பேச்சு கொடுத்தால் விலகி விடுங்கள்.

8. யாரேனும் உங்களை பின் தொடர்வது தெரிந்தால் பயப்படாமல் ஏதேனும் அருகில் உள்ள கடைகளுக்கு அல்லது மக்கள் அதிகம் உள்ள இடங்களுக்குச் சென்று மற்றவர்களுக்கு தெரிய வையுங்கள்.

9. விசில் ஒன்றையும் பையில் எடுத்துச் செல்லலாம். ஆளரவமற்ற இடத்தில் தொலைவில் இருப்பவரை அழைக்க உதவும்.

10. செல்போன் உரையாடல் தவிர்க்கப்பட வேண்டும். இது மிக முக்கியம்  உங்கள் கவனம் தேவையற்ற செல்போன் பேச்சில் இருந்தால் மற்றவர்கள் கவனம் உங்கள் மேல் எளிதாக பதியும்.

11. குறிப்பிட்ட ஒரே பாதையில் ஒரே நேரத்தில் தினமும் செல்வதை தவிர்த்து அவ்வப்போது மாற்றுங்கள். இடம் நேரம் அறிந்து உங்களை தாக்க வாய்ப்புண்டு.

12. பெண்கள் என்றால் ‘குனிந்த தலையும் அன்ன நடையும்’ என்று இருந்தது அந்த காலம். இந்தக் காலத்தில் தைரியமான பார்வையுடன் கூடிய வேகமான நடை அவசியம்.

13. பார்வையில் எச்சரிக்கையுடனும் நான்கு புறமும் விழிப்புணர்வுடனும் செல்வது நல்லது .

14.  தனியே செல்லும் பெண்களுக்கு பெரும்பாலும் பேருந்துதான் பாதுகாப்பு. அப்படி இல்லாத பட்சத்தில் ஆட்டோ பரவாயில்லை. டாக்ஸி போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.

15. முன்னேறிய மொபைல் டெக்னாலஜி ஆபத்தில் உதவினாலும், நம்மை உடனே காத்துக்கொள்ள உதவுவது தற்காப்புக் கலைகள் என்பதால் அவற்றை கற்றுக்கொள்வதும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com