0,00 INR

No products in the cart.

பொழுதைப் போக்க இந்த செலவு அவசியம்தானா? – மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

அன்று 2.15 ரூபாயில் தியேட்டரில் படம் பார்த்த நாம், இன்று 150 ரூபாய் செலவழிக்கிறோம். இக்காலகட்டத்துக்கு இந்த செலவு ஏற்புடையதா? இல்லையா? FB வாசகியர்களின் பதிவுகள்!

வறுமையில் உழலும் நடுத்தர வர்க்கத்திற்கு இது சாத்தியம் இல்லை. ஹோம் தியேட்டரில் அவரவர் விருப்பப்பட்டால் பார்த்துக்கொள்ளும் காலத்தில், தொற்றுக்கும், மூட்டைப்பூச்சி கடி அவதிக்கும் ஆட்பட யாரும் விரும்புவதில்லை. காதலர்களுக்கும், இளைய சமுதாயத்தினருக்கு (பொறுப்பற்ற) மட்டும் இது ஏற்றது.
– ஸ்ரீவித்யா பிரசாத்

Ellame wastethan
-சித்ரா குமார்

வருமானம் ratio கூட அதே விகிதம்தானே. மாதம் ஒரு முறை குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக செலவழிப்பதில் தப்பு இல்லை
-விஜி ஆர். கிருஷ்ணன்

கொரோனா பயத்தில் வருட/மாதக்கணக்கில் வீட்டுக்குள் அடைந்து கிடந்து வெறுப்பான மக்களுக்கு இப்படியொரு மாறுதல் தேவைதான்.
-ஜெயந்தி மஹாதேவன்

நிச்சயம் ஏற்புடையதுதான். நான்கு சுவருக்குள் நமது வாழ்க்கை அடங்கிவிட்ட இந்த நாட்களில் வெளியில் சென்று நல்ல படங்களை தியேட்டரில் குடும்பத்துடன் பார்ப்பது என்பது அவசியமே.
-புவனேஸ்வரி சிவராமகிருஷ்ணன்

பழைய படங்கள் போல குடும்ப, கருத்துள்ள படங்கள் வந்தால் பணம் கொடுத்து குடும்பத்தோடு பார்த்து பொழுதைக் கழிப்பதில் தவறில்லை. சினிமா, தன் எல்லைகளை மீறும்போது, அதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போது, அதே பணத்துக்கு கோவிலோ, பூங்காவோ சென்று பொழுதைப் போக்கிக்கொள்ள வேண்டியதுதான்.
-ரவிகுமார் கிருஷ்ணசாமி

வேண்டவே வேண்டாம். முன்பு படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இரண்டு வருடம் கூட ஆகும். ஆனால், இப்போது வெளிவந்த இரண்டு மாதத்திலேயே நம் வீட்டிற்குள் வந்து விடுவதால் செலவே இல்லாமல் பார்ப்பதுதான் நல்லது.
-உஷா முத்துராமன்

இப்போதைக்கு இனிய இல்லத்தில் நல்ல திரைப்படங்களை நாளும் கண்டு ரசித்து, உவகையுடன் உள்ளம் களித்திருப்போம்.
-ஜெயலக்ஷ்மி வெங்கடாச்சலம்

உள்ளங்கையில் உலகம் என்றாகி விட்டபின், நல்ல தரமான நம் மொழி, பிற மொழி படங்களை வீட்டிலிருந்தே வசதியாகப் பார்த்து விடலாம். செலவு பற்றியும் யோசிப்பதுடன்,செலவழித்துப் பார்ப்பதற்குத் தகுதியான படங்கள் வருவது குறைவே.
-மகாலக்ஷ்மி சுப்ரமணியன்

படங்கள் ஒன்றும் இப்போது பார்க்கக்கூடிய கதை அம்சத்துடன் இருப்பதில்லை. படம் பார்க்க செலவழிக்கும் பணத்தை ஆதரவற்றோருக்கு வழங்கினால் மனம் திருப்தி அடையும்.
-வசந்தா கோவிந்தன்

ஏற்புடையதுதான். அன்று நம் வருமானம் எவ்வளவு? இன்று நம் வருமானம் எவ்வளவு? கால மாற்றத்தில் பொருளாதார வளர்ச்சியில் உயர்வுதான் இது.
பொ.பாலாஜிகணேஷ்

தேவையே இல்லை. அன்று 2.15 ரூபாயில் படம் பார்த்தபோது, தியேட்டர் போனாதான் படம் பார்க்க முடியும் என்ற நிலை. இப்போது வீட்டிலேயே ஹோம் தியேட்டர் எபெக்ட்டுடன் பார்க்க முடிகிறது.
-ஹேமலதா சீனிவாசன்

தியேட்டரில் அன்று நாம் செலவழித்த பணத்திற்கு மன மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைத்தது. இன்று நம் மகிழ்ச்சியைத் தொலைத்து, நோய் தொற்றையும் வாங்கி வர வேண்டுமா என்ன? ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாகஎன்று விரைவில் போட்டு விடுவார்கள் பார்த்துக் கொள்ளலாம். வேண்டவே வேண்டாம்… அந்தப் பணத்தை பயனுள்ள வழியில் (நேரத்தையும்) செலவு செய்யலாம்
-வாணி கணபதி

நான் சினிமா தியேட்டருக்குப் போய் வெகு காலமாகி விட்டது. நான் கடைசியாக தியேட்டரில் போய் பார்த்த படம் ஜென்டில் மேன். அதற்குப் பிறகு இதுவரை எந்தத் திரைப் படத்தையும் தியேட்டரில் பார்த்ததில்லை. புதுப் படங்களை விரும்புவதும் இல்லை.
-சாந்தி ஸ்ரீனிவாசன்

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்திச் சென்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் அதை அனுபவித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்தான் நாம் இருக்கிறோம். தியேட்டருக்கு காலார நடந்து சென்று டிக்கெட் வாங்க கியூவில் நின்னு, அவங்கவங்க இடத்தைப் பிடிச்சு, நியூஸ்ல ஆரம்பிச்சு, கடைசிவரை திரைச்சீலை மூடும் வரை நின்று பார்த்து குடும்பத்துடன் வரும்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி, இப்பொழுது இல்லை.
– பார்வதி முத்தமிழ்

எட்டணா பெஞ்சு டிக்கட்டில் படம் பார்த்த சந்தோஷம் பாக்ஸில் ஏ/சியில் வித் ஸ்னாக்ஸோடு 300ரூபாய் கொடுத்து பார்த்தாலும் சுத்தமா பிடிக்கலை. குடும்பத்தோடு கடைசியாகப் படம் பார்த்தது 1995ல் என நினைக்கிறேன்.
-பார்த்தசாரதி ஜம்புலிங்கம்

காசு மட்டுமா செலவு? நம் நேரம், சக்திஎன பல வகையில் வேஸ்ட். சினிமாவே வேண்டாம்.
-ரங்கம் ஸ்யாம்

உள்ளங்கையில் சினிமா சுருங்கி விட்டது. போரடித்தால் நிறுத்திக் கொள்ளலாம். அவசர வேலை வந்தால், திரையிலிருந்து வெளி வந்து, பின்னர் ரசிக்கலாம். விருப்பம் போல் முன்னும், பின்னும் சென்று ரசிக்கலாம். குறைந்த செலவில் நிறைய படங்கள். பின் எதற்கு அலைச்சலுடன் சேர்த்து பெருஞ்செலவு?
-கோமதி சிவாயம்

ஏற்புடையதுதான். எப்போதுமே பணத்தை மட்டும் வைத்து, சந்தோஷத்தை எடை போட முடியாது. டிவியில் பார்ப்பதற்கும் தியேட்டருக்குச் சென்று ஹைடெக் வசதியுடன் நல்ல சவுண்ட் சிஸ்டத்தில் படம் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட, வெளி உலகில் சென்று நான்கு பேரை பார்த்து, எல்லோருடனும் சேர்ந்து படம் பார்ப்பது ஒரு அருமையான அனுபவம்தான்.
– கிருஷ்ணவேணி

ஏற்புடையதாக இல்லை. அன்று 2.50ரூபாயும், இன்று 150ரூபாயும் சமம்தான். இருந்தாலும், அன்று சினிமா என்று சொன்னாலே மனதில் ஒரு தனி மகிழ்ச்சி பிறக்கும். இன்று சினிமாவை நினைத்தாலே வெறுப்பாகத்தான் இருக்கிறது.
-கலைமதி சிவகுரு

நமக்கு வசதியான நேரத்தில் குறைந்த செலவில் குடும்பத்திலுள்ளவர்களுடன் சேர்ந்தோ, (பார்க்கும்படியாக இருந்தால்) தனியாகவோ பார்க்கலாம். மேலும், தியேட்டரில் காதைப் பிளக்கும் சத்தம், விசில் சத்த இடையூறுகளைத் தவிர்க்கலாம். நம் சௌகர்யத்திற்கேற்ப ஓடிடியில் நிறுத்தி நிறுத்தி கூட பார்க்கலாம். செலவும் குறைவு.
-ராதிகா ரவீந்திரன்

சினிமாவிற்குச் செலவு செய்வதைப் போன்ற, ‘தண்ட செலவு எதுவுமே இல்லை. இதை இளைய தலைமுறையினரே அதிகம் பார்க்கின்றனர். தம்பிடிக்கு பிரயோஜனம் இல்லாத, காதல்/ கொலை /வஞ்சகத்தை மட்டுமே கருத்தாக வைத்து எடுக்கப்படும் இன்றைய படங்களைப் பார்த்து, கெட்டுப்போவோரே அதிகம்.
-ப்ரீதா ரெங்கசாமி

We got dosa for Rs.5 earlier. now it’s almost close to Rs.100. Shall we not eat in hotel too?
-ஹரிணி நாகராஜன்

பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்கு தக்கவாறு நாம் வாழ வேண்டும். திரைப்படம் தயாரிக்க செலவு அதிகமாகிறது. ஆகவே, திரைப்பட கட்டணம் அதிகமாகத்தான் இருக்கும்.
சண்முகம் ராணி

மற்ற காலங்களில் என்றாவது ஒரு நாள் போகலாம். கொரோனா காலத்தில் அது முடியாதது மட்டுமில்லை; கூடவே கூடாது. காசை கொடுத்து சனியனை விலைக்கு வாங்க வேண்டுமா?
– ஜானகி பரந்தாமன்

என்ன வீட்டுக்குள்ளே அமர்ந்து படம் பார்ப்பது? சுத்த போர், ஜாலியா டிரஸ் செஞ்சுண்டு, கூலா தியேட்டரில் படம் பார்த்து கைத்தட்டி, சிரித்து மகிழ்ந்து ஜாலியா மாதத்தில் ஒரு நாளில், நாம் நமக்காக செலவு செய்து வாழ்வோம். தோழிகளுடன் சினிமாவை தியேட்டரில் பார்ப்போம்!
– ராதா நரசிம்மன்

நமது பொழுதுபோக்கு, சிலரின் வாழ்வாதாரம் எனில் திரைப்படத்திற்காக செலவிடுவதில் தவறே இல்லை.
-விஜி வீரா

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

காலம் கெட்டுப்போச்சு… சிக்கலில் ஷாருக்கான் வாரிசு!

0
- ஜி.எஸ்.எஸ். தன் குழந்தைகளைப் பற்றி ஊடகங்களிடம் பலமுறை ஷாருக்கான் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. ‘என் குழந்தைகள் மிகவும் ஒழுங்கானவர்கள். என்னைவிட கட்டுப்பாடு மிக்கவர்கள். நட்சத்திரங்களின் குழந்தைகள் என்றால் அவர்கள் சீர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று...

ஷேமிங்! ஷேமிங்!

0
விழிப்புணர்வு விஷயம் - ஆர். மீனலதா, மும்பை ஷேம் ஆன் யு! ஷேம் ஆன் Her! ஷேம் ஆன் Him! ஷேம் ஆன் Them! விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகி, உலகம் சுருங்கிப் போன போதிலும், மக்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை...

புண்ணியம்!

சிறுகதை : கீதா சீனிவாசன் ஓவியம் : சேகர் காலையிலிருந்தே கலையரசி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். குடும்ப நலனுக்காக அன்று சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள். குறிப்பாக, அந்த ஏரியாவில் பிரபலமான ஸ்வாமி ராமன்ஜி அதில்...

சுண்டி இழுக்கும் சுவையில் காரக் குழம்பு வகைகள்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி கேரட் காரக் குழம்பு தேவையானவை : சற்று நீளமான பெரிய கேரட் துண்டுகள், தேங்காய்த் துருவல், புளி, மஞ்சள் தூள், உப்பு - தேவைக்ககேற்ப. செய்முறை : வாணலியில் எண்ணெய்...

கவிதைத் தூறல்

2
பூமி இடி, மின்னல், மழையுடன் மனிதர்களையும் தாங்குவேன் பொறுமையின் சின்னம் பூமி! ***** சோம்பேறி பொறுப்பை தட்டிக்கழிக்கும் சோம்பேறிக்கு பிடித்த வாசகம், 'மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்!’ ***** தமிழ் உறவு துறவு ஒரு எழுத்து மாறி வாழ்க்கைப் பாடத்தையே புரட்டிப் பார்க்கிறது தமிழ்! - எஸ்.பவானி, திருச்சி -------------------- தனிமை தனிமைப் படுத்தப்பட்டார் கோயிலுக்குள் கடவுள் ஊரடங்கு காலம்! ***** நினைவு மிட்டாய் நினைவில் கைசூப்பும் குழந்தை மாதக் கடைசி! ***** உதவி! தலைமகன் தராததை தபால்காரர் தருகிறார் முதியோர் உதவித் தொகை! - நிலா, திருச்சி