முல்லைப் பெரியாறு அணை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு!

Published on

கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த 29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்த வகையில், தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் அனுமதியின்றி முல்லைப் பெரியாறு அணை திறக்கப் பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், தமிழக அரசுதான் முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர்.தியாகராஜன், .பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் நேரில் சென்றூ முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com