மும்பை-கர்நாடகா எல்லைப் பகுதிக்கு ‘கிட்டூர் கர்நாடகா’ என புதிய பெயர்: கர்நாடக முதல்வர் அறிவிப்பு!

மும்பை-கர்நாடகா எல்லைப் பகுதிக்கு ‘கிட்டூர் கர்நாடகா’ என புதிய பெயர்: கர்நாடக முதல்வர் அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மும்பை–கர்நாடகா எல்லைப் பகுதிக்கு 'கிட்டூர் கர்நாடகா' என பெயர் மாற்றம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உருவாகி 65 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி கர்நாடகாவில் நேற்று கர்நாடக ராஜ்யோத்சவா எனும் பெயரில் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:

மும்பை – கர்நாடக எல்லைப் பகுதியில் அடிக்கடி எல்லை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு 'கிட்டூர் கர்நாடகா' என விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும். மேலும் பெல்காவி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மராத்தி மொழி பேசக்கூடிய மக்கள் அதிகம் இருப்பதால் அப்பகுதியை மராட்டிய மாநிலத்துடன் இணைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஏற்கனவே ஹைதராபாத் – கர்நாடக பகுதிக்கு 'கல்யாண கர்நாடகா' என பெயர் சூட்டி உள்ளோம்.

–இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com