முருங்கைக்கீரை தேங்காய் குழம்பு

முருங்கைக்கீரை தேங்காய் குழம்பு

ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்

.தேவை:

முருங்கைக்கீரை _ 2கப் .

புளி_லுமிச்சம் பழம் அளவு ,

தேங்காய் துருவல் _1 கப் ,

வத்தல் பொடி __2 டேபிள்ஸ்பூன்.

மஞ்சள் பொடி ,பெருங்காயப்பாடி ,வெந்தயம் __தலா 1/4 டீ ஸ்பூன் ,

கடுகு, உளுந்து , சீரகம் _தலா 1டேபிள்ஸ்பூன்.

சின்ன வெங்காயம் __1 கப் ;

தக்காளி __1 ;

உப்பு .எண்ணெய்__தேவைக்கு .

செய்முறை :

புளியை ஊறப்போட்டு கரைக்கவு ம் , தேங்காய் துருவல் ,சீரகம் .மற்றும் 5 சின்ன வெங்காயம் போட்டு நைஸா க அரைக்கவும், புளி கரைசலில்,உப்பு ..பொடிவகை களை போட்டு கொதித்த பின்பு மீதியுள்ள சின்ன வெங்காயம், .கீரை, தக்காளி . கீறிய பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும். கீரை வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். ஐந்து நிமிடம் கொதித்த பின்பு கடுகு உளுந்து. வெந்தயம் ,கருவேப்பிலை போட்டு தா ளி க் க வு ம் , தீயை அனைத்து விட்டு .மல்லிதழை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயப்பொடி போடவும் .இது சாதம் .சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com