முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா இன்று தொடங்கி, நாளை மறுநாள் வரை (அக்டோபர் 28 முதல் 30 வரை) நடக்கிறது. இதில் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் வந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சங்கிலி என்பவர், இந்த் குருபூஜை விழாவுக்கு செல்ல தனியார் வாகனங்களூக்கு அனுமதிக்கும்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கினால், அது கொரோனா நோய்ப்பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும் எனவே தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com