0,00 INR

No products in the cart.

நாடு முழுவதும் வங்கிகள் 2 நாட்கள் ‘ஸ்டிரைக்’; வங்கிகள் கூட்டமைப்பு அறிவிப்பு!

நாட்டில் பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு தனியார் மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து வருகிற 16-ம் தேதி மற்றும் 17-ம் தேதிகளில் நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் பொதுத்துறை வங்கிகள் மூலம், 13 தனியார் நிறுவனங்களுக்கு, 4.86 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அந்தக் கடன் முறையாக செலுத்தப்படாததால், இந்த வங்கிகளுக்கு, 2.85 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஆனால், நஷ்டத்தில் இயங்கும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை மீட்க அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் பொதுத்துறை வங்கிகள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சி நடக்கிறது.இது தொடர்பான மசோதாவை பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்லது. அதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, வருகிற 16-ம் தேதியும் 17-ம் தேதியும் நாடு தழுவிய அளவில், ‘ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தமிழக பொறியியல் படிப்புகள்; தரவரிசைப் பட்டியல் வெளியீடு! 

0
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப் பட்டது.  -இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்ததாவது:  தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது....

தங்கம் விலை அதிரடி சரிவு: மக்கள் மகிழ்ச்சி! 

0
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.   –இதுகுறித்து சென்னை தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது:   கடந்த ஆண்டு ஏற்பட்ட...

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்! 

0
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில...

இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் ரத்து! 

0
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.  இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் இந்த கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம்! 

0
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்று நாளை காலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.   –இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...