0,00 INR

No products in the cart.

நடிகை பிரியங்கா சோப்ரா கணவரை விவாகரத்து? பாலிவுட்டில் பரபரப்பு!

-சாந்தி கார்த்திகேயன்.

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன் கணவர் நிக் ஜோன்ஸை விவாகரத்து செய்யப் போவதாக எழுந்த தகவலால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையானார். இந்நிலையில் குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதையடுத்து ஹாலிவுட்டில் கால் பதித்த பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்கள் என படு பிஸியாக உள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை காதலித்து, கடந்த 2018 ஆண்டு திருமணம் செய்தனர். அவ்வப்போது கணவருடன் தான் எடுத்துகொண்ட போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனஸும் சேர்ந்து வீடு வாங்கினர். அந்த வீட்டில் தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடிய அவர்கள் அந்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜோனஸ் பெயரை திடீரென நீக்கியுள்ளார். இதைக் கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

உங்களுக்குள் விஷயங்கள் சரியாக செல்கிறதா? அல்லது ஏதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா?’’ என கேட்டு வருகின்றனர். ஆனால் பிரியங்காவும் சரி.. நிக் ஜோனஸும் சரி.. இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கின்றனர். இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

மறைந்தும் மறையாத மகா படைப்பாளி நினைவு தினம்!

0
- எம்.கோதண்டபாணி விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், தலைசிறந்த சரித்திரம் மற்றும் சமூக நாவலாசிரியர், பத்திரிக்கையாளர் என பண்முகம் கொண்ட மனித நேயர் அமரர் திரு.கல்கி அவர்கள். மகாத்மா காந்தியின் மீது அளப்பரிய பற்று...

எங்கே செல்லும் இந்த பாதை? அல்லாடுகிறதா அதிமுக?!

0
-மூத்த பத்திரிகையாளர் ஜாசன். தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி,ஆர் தலைமையில் அதிமுக கட்சி உருவாகி, இந்தாண்டு பொன்விழா கொண்டாடுகிறது. திராவிட அரசியலைப் பொறுத்தவரை அதிமுக-வை ஒதுக்கிவிட்டு யாரும் பேச முடியாது. அத்துடன் தமிழகத்தில் அதிக...

King of Crime Novels: ராஜேஷ்குமார் கலகலப்பு பேட்டி!

1
-பேட்டி: சேலம் சுபா. இன்று .விஞ்ஞான உலகம் முன்னேறி கைக்குள் உலகம் அடங்கி விட்டாலும் அன்றே அந்த விஞ்ஞானத்தை பாமரரும் அறியும் வண்ணம் எளிய எழுத்துக்களால் விவரித்த பெருமைக்குரியவர் ..1500 நாவல்களுக்கும் மேல் எழுதி...

சீனத்து பட்டு ரகசியம்: காஞ்சிபுரம் பட்டின் மவுசு!

0
- ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி தீபாவளி முடிந்து விரைவில் பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது. எந்த பண்டிகையானாலும் பெண்களைப் பொறுத்தவரை பட்டுப் புடைவை என்றால் தனி கிரேஸ்தான்! பட்டு வாங்கினாலும் அதை பராமரிக்கப் பாடுபட வேண்டுமே...

ஐசியூ-விலிருந்து நேராக கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் வீரர் அபாரம்!

0
-எஸ். வீரராகவன். துபாயில் நடந்து வரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு (நவம்பர் 11) 2-வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான்,...