spot_img
0,00 INR

No products in the cart.

நடிகை சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏறபட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த அக்டோபர் மாதம் தனது கணவரான நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தர். இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். அதன் பின்னர் மன அமைதிக்காக ஆன்மிக சுற்றுலா சென்ற நடிகை சமந்தா, கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அதில் அவரது உடை சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் நடிகை சமந்தா.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது மேலாளர் மகேந்திரா தெரிவித்துள்ளது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அவருடைய விளம்பரதாரரான வம்சி சேகரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார. அதில் அவர் தெரிவித்ததாவது:

சமந்தா பூரண நலமாக உள்ளார். அவருக்கு லேசான இருமல் இருந்ததால், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் நேற்று சில பரிசோதனைகளை மேற்கொண்டார். தற்போது சமந்தா முற்றிலும் நலமுடன் உள்ளார்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா கடைசியாக தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் குணசேகரன் இயக்கத்தில் ‘’ஷகுந்தலம்’’ என்ற படத்திலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘’காத்து வாக்குல ரெண்டு காதல்’’ ஆகிய படங்களிலிலும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

நரி முகத்தில் விழித்தால் நல்லது: பிரபல வங்காநரி ஜல்லிகட்டு!

0
-பிரமோதா. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பல கிராமங்களில் வருடாவருடம் காணும் பொங்கலன்று வங்கா நரி ஜல்லிகட்டு நடப்பது வழக்கம். அதேபோல இந்த வருடமும் கொட்டவாடி ஊராட்சியில் வனத்துறை எச்சரிக்கையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு...

ஏப்ரல் 3-ல் ‘கிராமி’ விருது விழா; லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுவதாக அறிவிப்பு!

0
சர்வதேச அளஈள் திரைப்பட துறையினருக்கு ஆஸ்கர் விருது போல் இசை துறையினருக்கு ‘கிராமி விருது’ கருதப் படுகிறது. இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி...

சஸ்பென்ஸ் திரில்லர்.. சூப்பட் படம் கார்பன் படம்!

0
.-ராகவ் குமார். தமிழ் சினிமாவில்  சமீப காலமாக சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் வந்து கொண்டுஇருக்கின்றன. இந்த வகையில் சமீபத்தில்  பொங்கல் ரிலீஸ் படங்களில் ஒன்றான கார்பன் படமும் சேரும். நடிகர் விதார்த்துக்கு இது 25-வது...

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா; இரும்பு பெட்டிகளில் அடைக்கப்படும் மக்கள்..அதிர்ச்சி வீடியோ!

0
சீனாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் இரும்பு பெட்டி வசிப்பிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உலகெங்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவில்  தற்போது ஓமைக்ரான் தொற்றூ அதிகரிக்கத்...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டைட்டில் ஸ்பான்சர்ஷிப்: டாடா நிறுவனம் கைப்பற்றியது!

0
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டாடா நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றதாக ஐபிஎல் கிரிக்கெட் வாரியத் தலைவர் பிரிஜேஷ்படேல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்...