நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம்; வேல்ஸ் பல்கலைக் கழகம் வழங்கியது!

நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம்; வேல்ஸ் பல்கலைக் கழகம் வழங்கியது!

Published on

நடிகர் சிம்புவுக்கு அவரது பன்முகத் தன்மைக்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்து அளித்தது வேல்ஸ் பல்கலைக்கழகம். அதை தன் பெற்றோருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார் சிம்பு.

கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் 'கெளரவ டாக்டர்' பட்டம் கிடைக்கப் பெறூவது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளன.அந்த வரிசையில் 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' இன்றூ நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

இதுகுறீத்து வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேசன் தெரிவித்ததாவது:

நடிகர் சிம்பு 6 மாத குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர்.அவர் தன் தந்தையைப் போலவே நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வருகிறார். அவரது சாதனையைக் பாராட்டும் வகையில் இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி"

இவ்வாறூ ஐசரி கணேஷ் தெரிவித்தார்.

ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து வருவது குறீப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com