நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல்; மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் செய்ய இன்றே கடிசி நாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வருகிற 19-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான மனு தாக்கல், ஜனவரி 26-ம் தேதி துவங்கியது.  நேற்று முந்தினம் வரை மொத்தம் 10 ஆயிரத்து, 153 மனுக்கள் தக்கல் செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பெறப்பட்டன. நேற்றும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் அதிகளவில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, கடைசி நேரத்தில் வருபவர்களுக்கும், வாய்ப்பளிக்கும் வகையில் 'டோக்கன்' கொடுத்து மனுக்களை பெற திட்டமிடப்பட்டு உள்ளது. மனுக்கள் பரிசீலனை நாளை நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் இம்மாதம் 7-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com