0,00 INR

No products in the cart.

நரி முகத்தில் விழித்தால் நல்லது: பிரபல வங்காநரி ஜல்லிகட்டு!

-பிரமோதா.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பல கிராமங்களில் வருடாவருடம் காணும் பொங்கலன்று வங்கா நரி ஜல்லிகட்டு நடப்பது வழக்கம். அதேபோல இந்த வருடமும் கொட்டவாடி ஊராட்சியில் வனத்துறை எச்சரிக்கையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

‘’நரி முகத்தில் கண் விழிச்சால் நல்லதுங்க. அதான் இப்படியொரு சம்பிரதாயம் எங்க ஊர் சுத்துப்பட்டு கிராமங்கள்ல நடக்குது’’ என்றனர் ஊர் மக்கள்.

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொட்டவாடி மற்றும் ரங்கனூர் கிராமத்தில்  சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நடத்ஹப் பட்டு வருகிறது வங்காநரி ஜல்லிக்கட்டு. இப்பகுதிகளில் இந்த ஜல்லிக்கட்டு பேமஸ்.. ‘’காணும் பொங்கல் அன்று வங்கா நரி முகத்தில் விழித்தால். அந்த ஆண்டு நன்றாக இருக்கும்’’ என்பது இப்பகுதி மக்கள் நம்பிக்கை. அதற்காக, ஒரு வாரத்திற்கு முன்னரே காட்டுப்பகுதிக்கு சென்று நரி வேட்டையாட வலையோடு காத்திருப்பார்கள். நரி பிடிபட்டதும்..ஊருக்கு கொண்டு வந்து கோயிலில் கட்டிப்போட்டு விடுவார்கள். காணும் பொங்கல் அன்று கோலாகலமாக விழா கொண்டாடி, நரிக்கு பூஜை செய்து பின்னர் மேளதாளத்துடன் அதை ஊரைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.. எல்லோரும் நரி முகத்தை பார்த்தவுடன் மீண்டும் காட்டுக்குள் கொண்டுவிட்டு விடுவார்கள். வன விலங்கு என்பதால்.. இதற்கு வனத்துறை தடை விதிக்கும். ஆனால் கிராம மக்கள் எப்படியாவது ஒரு நரியைப் பிடித்து கொண்டு வந்து பூஜை செய்து, ஊர் முழுக்க ஊர்வலம் கொண்டு சென்றபின், மீண்டும் அதை காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். வனத்துறையும், இதை கண்டும் காணாமல் இருந்து விட்டு பெயருக்கு இரண்டு பேர் மீது வழக்கு போட்டு விட்டு விடுவார்கள்

‘’முன்பெல்லாம்.. கோயிலைச் சுற்றி நரியை ஒட விடுவார்கள்.. இதனால் ஜல்லிக்கட்டு என்று அழைத்து வந்தார்கள்.. இப்போது கட்டுப்பாடு காரணமாக கூண்டில் வைத்து சுற்றி வருகின்றனர்.’’ என்றார் ஊர் பெரிசு ஒருவர்.

 இதேபோல் குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கனூர் கிராமத்திலும் கோயில் வளாகத்தில் வங்காநரி பிடித்து வந்து வழிபாடு நடத்தி பின்னர் காட்டில் விட்டுள்ளனர்.அதேபோல் சின்னம் நாயக்கன் பாளையத்தில் அனுமதியின்றி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய இருவர் மீது வழக்கு பதிவு செய்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் வனத்துறையினர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கல்யாணத்தில் கலக்கல் டான்ஸ்; நிக்கி கல்ராணி- ஆதி அசத்தல்! 

0
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.அதையடுத்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘ராஜவம்சம்’...

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

0
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது; சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த...

புழு; திரைப்பட விமர்சனம்!

1
-தனுஜா ஜெயராமன்  கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு.  முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை...

டான்; அறியும் தேடல்!

0
-ராகவ் குமார் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ள கல்லூரி கதை டான். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கி உள்ளார். ‘நமது பிள்ளைகளை விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க விடுங்கள்’ என...

மத்திய அமைச்சர் அமித் ஷா-வுக்கு சவுரவ் கங்குலி கொடுத்த விருந்து!

0
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கொல்கத்தா சென்றபோது, அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது வீட்டில் விருந்து அளித்தார். மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக...