நார்த்தங்காய் பச்சடி

நார்த்தங்காய் பச்சடி

B.லலிதா. திருச்சி

தேவையானவை:

நார்த்தங்காய் – ( மீடியம் சைஸ்)-

பச்சை மிளகாய்– 10 அல்லது 12

புளி பெரிய எலுமிச்சம்பழம் அளவு.

நல்லெண்ணெய்ஒரு கரண்டி.

உப்பு,- தேவைக்கேற்ப.

பெருங்காயம், மஞ்சள் தூள்– 1 சிட்டிகை.

மிளகாய்த்தூள்2 டேபிள்ஸ்பூன்.

வெல்லம் தூள்ஒரு சிறிய கப்.

செய்முறை:-

நார்த்தங்காயை கழுவித் துடைத்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பச்சைமிளகாய் லேசாக வதங்கியதும் நார்த்தங்காய் துண்டுகளையும் போட்டு வதக்கவும். ஊற வைத்துள்ள புளியை நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ரொம்பவும் தண்ணியாக இல்லாமல் ஓரளவுக்கு கெட்டியாக கரைக்க வேண்டும் .
நார்த்தங்காய் வதங்கியதும் புளிக் கரைசலை விடவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், போட்டு கொதிக்கவிடவும். காரம் தேவையானால் சிறிது மிளகாய்த்தூள் சேர்க்கவும். கொதித்து கெட்டியாகி வரும்போது வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி வைக்கவும். இந்த நார்த்தங்காய் பச்சடி , வாய்க்கு ருசியாகவும் உடம்புக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். தயிர் சாதம் ,குழம்பு சாதம், உப்புமா பொங்கல் எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com