0,00 INR

No products in the cart.

நீட் தேர்வு விவகாரம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்!

நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைப்பெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, பா.ஜ.க, பா.ம.க, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது..

அதன்படி, ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் தற்போது வரை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை.இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிருந்த போதிலும், மூன்று முறை அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான், நீட் தேர்வு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கூடி முடிவெடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த வகையில் இன்று நடைப்பெறும் ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி பிரதிநிதிகள் அனைவரின் கருத்துகளையும் கேட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.கவும் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழப்பு! 

0
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரயிலிலிருந்து பெண் கார்டு தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  -இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தெற்கு ரயில்வே பொது சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது;  கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச்...

ஏடிஎம் சேவைக் கட்டணம்; இன்று முதல் உயர்வு! 

0
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்மில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணமாக...

ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு; தலைமை இமாம் உட்பட பலர் பலி! 

0
தாலிபான் ஆட்சி நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள்  ஆட்சி நடந்து வரும்நிலையில் தலைநகர் காபூலில் உள்ள பிரபல மசூதியில் வெடிகுண்டு வெடித்ததில் தலைமை இமாம் உட்பட 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை...

மகாநதியில் வெள்ளப் பெருக்கு; தவிக்கும் கிராமங்கள்! 

0
ஒடிசா மாநிலத்தில் மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோரத்திலுள்ள 200-க்கு மேற்ப்பட்ட  கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.  -இதுகுறித்து ஒடிசாவில் மீட்பு...

காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் பதவி: குலாம் நபி ஆசாத் ராஜினாமா!

0
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு...