ரஷ்யா – உக்ரைன் போர்: பிரபலம் அடைந்த  Z என்னும் குறியீடு!

ரஷ்யா – உக்ரைன் போர்: பிரபலம் அடைந்த  Z என்னும் குறியீடு!

எஸ். வீரராகவன்.

 உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் தீவிரம் அடிந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிலும் இந்த போருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் மாஸ்கோவில் பேரணி நடத்தினர்.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆதரவளிப்பவர்களும் கணிசமாக உள்ளனர். அப்படி ரஷ்ய போருக்கு ஆதரவளிப்பவர்கள் Z என்னும் எழுத்தை தங்கள் அடையாளமாக பயன்படுத்துகின்றனர். ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷ்யர்கள் தங்கள் உடைகளில், வாகனங்களில், குடியிருப்புகளில் Z என்கிற எழுத்தை அச்சிட்டு தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதன்முதலில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவ  வாகனங்களில் Z எனும் குறியீடு காணப்பட்டது. பின்னர் அனைத்து ரஷ்யா ராணுவ வாகனங்கள் மற்றும் போர் தளவாடங்களில் இந்த குறியீடு பொறிக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இந்த Z என்ற குறியீட்டுக்கான காரணம் குறித்து சமூகவலைதளங்கள் உட்பட பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ZA POBEDY (வெற்றி என்ற பொருள்) என்ற வார்த்தையின் சுருக்கம் என்பது சிலரது கருத்து. இன்னும் சிலர் ரஷ்யாவின் இலக்கு உக்ரைன் அதிபரை தோல்வியுறச் செய்வதுதான் என்பதால், உக்ரைன் அதிபர் பெயரின் முதல் எழுத்து என்று வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், உண்மையில் ரஷ்யா தங்களின் ராணுவ வாகனங்கள் மற்ர்றும் போர் விமானங்களை உக்ரைனில் எளிதில் அடையாளம் காணும் வகையில் Z என்னும் எழுத்து பெரிதாகப் பொறிக்கப்பட்டதாக, ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ.. ரஷ்யாவில் Z என்பது தேசப்பற்றின் அடையாளமாக மாறிவிட்டது. ரஷ்ய இளைஞர்கள் இந்த எழுத்து அச்சிடப்பட்ட டி சர்ட்டுகளை அணிந்து தங்கள் அதிபர் புடினுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அண்மையில் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரர் இவான் குலியக் Z என்கிற எழுத்து அச்சிடப்பட்ட டி சர்ட்டை அணிந்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com