மோடி ஆட்சியில் 10 கோடி வேலைவாய்ப்புகள்: மத்திய அரசு தகவல்..!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
10 crore jobs
10 crore jobs
Published on

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அவர் கொண்டு வந்த உஜ்வாலா, ஆவாஸ் யோஜனா திட்டம், பிறந்த பெண் குழந்தைகளுக்கு போடக்கூடிய செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்றவை இந்தியாவில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறையை நவீனமாக்குவதிலும், தன்னிறைவு பெறுவதிலும் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கான தீவிர நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது குறிப்பிடத்க்கது.

மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் வரலாற்றுச் சாதனைகளை இந்தியா நிகழ்த்தி உள்ளது. சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நிர்ணயித்து, நாடு தன்னம்பிக்கை கொண்ட புதுமைகளைத் தழுவி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது.

கடந்த 60 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை விட பாஜக சந்தித்த விமர்சனங்கள் அதிகம் என்றே சொல்ல வேண்டும். அதையும் தாண்டி மக்கள் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்றால் பாஜக ஆட்சி காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு நலத்திட்டங்களேயாகும்.

இதையும் படியுங்கள்:
நாட்டைக் காக்கும் பணியில் 1 லட்ச காலியிடங்கள்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!
10 crore jobs

பெண் வேலைவாய்ப்பு விகிதம் 2017–18ல் 22 சதவீதத்திலிருந்து 2023–24ல் 40.3 சதவீதமாக உயர்ந்துள்ளதையும், அதே காலகட்டத்தில், தேசிய வேலையின்மை விகிதம் 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளதையும் அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள் காட்டி, மண்டாவியா குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் வேலைவாய்ப்பும் 2013ல் 33 சதவீதத்திலிருந்து 2024ல் 55 சதவீதமாக உயர்ந்து பெரிய ஊக்கத்தைக் கண்டுள்ளது. பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவாக, 15 அமைச்சகங்களில் 70க்கும் மேற்பட்ட மத்திய நிதியுதவி திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாக மண்டாவியா கூறினார்.

இந்தியாவில் 2016ல் 19 சதவீதம் இருந்த சமூகப் பாதுகாப்பு 2025ல் 64.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மாண்டவியா குறிப்பிட்டார்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பணியாளர்கள் கொள்கை, திட்டமிடல் மற்றும் முன்னேற்றத்தின் மையமாக உள்ளனர் என்பதை மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். இந்த மூலோபாய மாற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதாயங்களை ஏற்படுத்தியுள்ளது மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் உள்ளடக்கத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூகப் பாதுகாப்பு, வலுவான நிறுவன வழிமுறைகள் மற்றும் கடைசி மைலை அடைய டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் மத்திய அரசின் பன்முக அணுகுமுறையை அவர் கோடிட்டுக் காட்டினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் 3 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. இவையெல்லாம் நாங்களாக சொல்பவை அல்ல என்று கூறிய அவர், இவை ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் என்றார். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து ஆண்டுதோறும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
நாட்டைக் காக்கும் பணியில் 1 லட்ச காலியிடங்கள்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!
10 crore jobs

கடந்த 16 மாதங்களில், மத்திய அரசு 11 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி 3-வது தடவையாக பதவியேற்றவுடன், 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ‘விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ என்ற திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் நல்ல பலன்களை அளித்து வருவதாகவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com