இஸ்ரேல், சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் இருந்து வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதுமுதல், இஸ்ரேல் கொடூரமான பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா கூட போரை நிறுத்துமாறு கூறிவிட்டது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டத்தால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரினால் சுமார் 45 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்கா முழு ஆதரவளித்து வருகிறது. மேலும் இந்தியா இங்கிலாந்து உள்ளிட்ட பல உலக நாடுகள் யார்பக்கமும் நிற்காமல் நடுநிலையில் உள்ளனர். அதேசமயம் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கும் உதவிகளை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரான் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரண்டு முறை பெரும் தாக்குதலை நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோன்று அல்- அவுதா மருத்துவமனையின் அருகே முகாமிட்டு தங்கி இருந்த பாலஸ்தீனர்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இஸ்ரேல் அப்பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்த போது, வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உக்ரைனில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.