10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு ! சமூக நீதிக்கு பின்னடைவு முதல்வர் ஸ்டாலின் கருத்து!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (நவ.,7) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அமர்வில் உள்ள நீதிபதிகள் தனித்தனியாக தீர்ப்பை வாசித்தனர். அதில் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி, பர்திவாலா ஆகிய 3 நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் இதற்கு எதிரான என தீர்ப்பை அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த தீர்ப்பு சமூக நீதி போராட்டத்துக்கு பலத்த பின்னடைவு வேண்டும் சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்திற்கும் ஒரு பின்னடைவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் எனவும் கருது கூறியுள்ளார்.

மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சமூக நீதி போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்ததிருப்பது பரபரப்பை கிளறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com