புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 100 % நிதி உதவி! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 100 % நிதி உதவி! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 100 % நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள தனியார் பள்ளியின் 175-வது ஆண்டு தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டார், அப்போது விழாவில் பேசிய அவர், தரமான, நல்ல கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது நமது அரசின் எண்ணம் என கூறினார்.

புதுச்சேரி சொசியெத்தே புரோகிரெசீஸ்த் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்றவர்களை பள்ளி சங்க தலைவர் வேதாந்தம் வரவேற்றார். நூற்றாண்டு சிறப்பு அறிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வாசித்தார்.

முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். மலரை முதல்வரிடமிருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘‘நூறாண்டு கண்ட சொசியெத்தே புரோகிரெசீஸ்த் பள்ளியில் பயின்று உயர்ந்த நிலையை அடைந்தவர்களை தற்போது அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவது அவசியம்.

நடத்த முடியாமல், சிரமப்பட்டு நடத்தப்படும் சாதாரண பள்ளிகளுக்கு 95 சதவீத விழுக்காடு அரசு நிதியுதவி கொடுத்து வருகிறது. எத்தனையோ பெரிய பள்ளிகள் வந்திருந்தாலும், இப்பள்ளி அரசின் நிதியுதவியோடு எத்தனை சிறந்த கல்வியாளர்களை உருவாக்கியிருக்கின்றது என்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது.

இதனை இப்போது உள்ள மாணவர்கள் எண்ணிப்பார்த்து படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தான் படிப்பார்கள். அப்படிப்பட்ட பள்ளிகளில், 100 சதவீத தேர்ச்சியை கொடுக்கின்றது பள்ளியாக இப்பள்ளி திகழ்வதற்கு எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். புதுச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 100 % நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆரம்பம் முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக மாணவர்களுக்கு கல்வி வழங்கி வரும் நிலையில் மாணவர்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

மேலும் மாணவர்களுக்கான உயர் கல்விக்கான தொகையை அரசே செலுத்தி வருகிறது என்றும் தெரிவித்த அவர் புதுச்சேரியில் உள்ள ஆரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 95% நிதி வழங்கி வரும் நிலையில் 100% முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com