மீண்டும் 1000 ரூபாய் நோட்டு ?

1000 Rs Currency
1000 Rs Currency

இந்தியாவில் மீண்டும் 1000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எழுந்த தகவலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை 2016 ஆம் ஆண்டு திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மட்டும் 1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டன. மேலும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் சமீபத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கான காலக்கெடுவும் முடிந்து நோட்டுகள் திரும்ப பெறப்பட்டிருக்கின்றன. தற்போது மீண்டும் புதியதாக 1000 ரூபாய் நோட்டை அச்சிட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

 மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

மேலும் அந்த புதிய 1000 ரூபாய் நோட்டில் புதிய நாடாளுமன்ற வளாகத்தினுடைய தோற்றம் பிரதானமாக இடம் பெற்றிருக்கும் வகையில் அந்த நோட்டு இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து இருப்பதாக ஏ என் ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அதிக மதிப்புக் கொண்ட ரூபாய் நோட்டினுடைய பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக விலை உயர்ந்த ரூபாய் நோட்டுக்கள் இனி மீண்டும் இந்தியாவில் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட வாய்ப்பு இல்லை. அதிகபட்சம் 500 ரூபாய் நோட்டும், அதற்கு கீழ் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் வேண்டுமானால் இந்தியாவில் புதிய வடிவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதே நேரம் பணம் இல்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி கூடுதல் ஆர்வத்தோடு செயல்பட தொடங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com