ஹேக் செய்யப்பட்ட 100,000 ChatGPT கணக்குகள்

ஹேக் செய்யப்பட்ட 100,000 ChatGPT கணக்குகள்
Updated on

சுமார் 100,000 அதிகமான ChatGPT பயனர்களின் Login விவரங்கள் திருடப்பட்டு, டார்க் வெப் தளத்தில் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

Raccoon Infostealer என்ற மால்வேரைப் பயன்படுத்தி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான ChatGPT Login விவரங்கள் டார்க் வெப்பில் லீக் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Group-IB அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 2023 மட்டும் 26,802 லாகின் விவரங்கள் அதிகபட்சமாக இந்த மால்வேரைப் பயன்படுத்தி திருடப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த மால்வேரால் பாதிக்கப்பட்டவர்கள் இதைப் பெரும்பாலும் Phising இமெயில் வழியாகவே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி உள்ளனர். Phising என்பது பிறரைக் கவரும் படியான விளம்பரங்களைப் பதிவிட்டு, ஒரு லிங்கை கொடுத்து அதிலிருந்து அந்த பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஈமெயில் அல்லது மெசேஜ் அனுப்புவார்கள். அதை நம்பி மக்களும் தங்களுடைய சாதனத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால், பதிவிறக்கம் செய்யப்பட்ட சாதனத்திலுள்ள மொத்த விபரங்களையும் ஹேக்கர்கள் எடுத்து விடுவார்கள். 

ஒருவருடைய சாதனம் இதுபோன்ற மால்வார்களால் பாதிக்கப்பட்டால், அந்த சாதனத்திலிருக்கும் லாகின் விவரங்கள், பிரவுசர் ஹிஸ்டரி, சமூக வலைதள கணக்குகளின் பாஸ்வேர்ட், கிரிப்டோ வாலெட் விவரங்கள் என அனைத்துமே ஹேக்கர்களின் கைவசம் சென்றுவிடும். இதைப் பயன்படுத்தி 2022ல் மட்டும், 3$ பில்லியன் மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகள் திருடப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் சொல்கிறது. 

போலியான Phising லிங்குகளைப் பயன்படுத்தி ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்தையுமே ஹேக்கர்களால் கட்டுப்படுத்த முடியும். இந்த வகை மால்வர்கள் பிறரின் தரவுகளை சேகரிப்பதற்காக பல வழிகளில் பெரும்பாலான கணினிகளில் பதிவிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என Group-IB நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிறுவனத்தின் அறிக்கையில், திருடப்பட்ட ChatGPT login விவரங்களில் 41,000 விவரங்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்களுடையது எனக் கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களின் கணக்குகளை அதிகம் திருடப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக தங்களின் பாஸ்வேர்டைப் புதுப்பித்து கணக்கை பாதுகாத்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து OpenAi நிறுவனம் இணைய பாதுகாப்பிற்காக 1 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.  

OpenAi நிறுவனத்திற்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், முழுவதும் தரவுகளை திருடும் மால்வேர் களினாலேயே இது நடத்தப்பட்டுள்ளது என குரூப் ஐபி நிறுவனம் உறுதிப்பட விளக்கியுள்ளது. எனவே ChatGPT பயனர்கள் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com