Amazon, FedEx நிறுவனத்தால் ஒரே நபருக்கு அனுப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட இலவச பார்சல்கள்.

Amazon, FedEx நிறுவனத்தால் ஒரே நபருக்கு அனுப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட இலவச பார்சல்கள்.

மெரிக்காவில் ஆர்டரே செய்யாத நபருக்கு நூறுக்கும் அதிகமான Amazon மற்றும் FedEx நிறுவன பார்சல்கள் வந்து குவிந்துள்ளது. இந்த இலவச பார்சல்களை, அக்கம் பக்கத்தில் உள்ள தனது அண்டை வீட்டார்களுக்கு இலவசமாகக் கொடுத்து அவர் மகிழ்ந்துள்ளார். 

பொதுவாகவே இதுபோன்ற இணையத்தில் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் அவர்களிடம் அதிகப்படியான ஸ்டாக் இருந்தால், உலகெங்கிலும் உள்ள தங்களின் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அனுப்புவது வழக்கம். ஆனால் இது எப்போதாவது மட்டும் தான் நடக்கும். அப்படி இலவசமாக ஏதாவது ஒரு பொருள் வந்தால், அதை வித்தியாசமாகவே வாடிக்கையாளர்கள் பார்ப்பார்கள். 

இப்படித்தான் அமெரிக்காவில் உள்ள வர்ஜினியாவில் வசிக்கும் ஸ்மித் என்பவருக்கு நிகழ்ந்துள்ளது. அவர் ஆர்டர் செய்யாத பொருட்கள் அவரின் வீட்டு வாசலுக்கு தொடர்ந்து வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். ஓரிரு பார்சல்கள் வந்தால் பரவாயில்லை, அவருக்கு இலவசமாக நூற்றுக்கணக்கான பார்சல்கள் வந்ததால் மிரண்டு போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இணைய வணிகம் செய்யும் நிறுவனங்கள் இப்படி ஒரே நபருக்கு இவ்வளவு பொருட்களை அனுப்ப மாட்டார்கள் என்பதே உண்மை. 

அப்படியானால் இவ்வளவு பார்சல்களை யார் அவருக்கு அனுப்பியது? இது குறித்து தீர விசாரித்தபோது, இத்தகைய நிகழ்வு ஒரு விற்பனையாளரின் மோசடி செய்யும் தந்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்ற உண்மை தெரியவந்துள்ளது. குறிப்பாக இவருக்கு அனுப்பப்பட்ட பார்சலில் எதிலுமே இவருடைய பெயர் இல்லை. வேறு யாருடைய பெயரோ குறிப்பிடப்பட்டு, இவருடைய வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பார்சல்களால் அவருடைய வீட்டு வாசல் முற்றிலுமாக அடைபட்டுப் போனது. 

அவருக்கு வந்த ஏராளமான பார்சல்களில் பெரும்பாலும் தேவையில்லாத பொருட்களே இருந்ததால், அவற்றை அப்புறப்படுத்த, அவரது வீட்டை சுற்றி இருக்கும் நபர்களுக்குத் தேவையானதை இலவசமாக வழங்கி இருக்கிறார். இப்படி ஒரே நபர்களுக்கு அதிகப்படியான பார்சல் அனுப்பப்படுவதை Brushing Scam என்பார்கள். அதாவது இ-காமர்ஸ் தலங்களில் விற்பனை செய்பவர்கள், போலியான ஸ்டார் ரேட்டிங் மற்றும் ரிவ்யூவை போட்டுக்கொள்ள, ரேண்டம் முகவரிகளுக்கு இதுபோன்ற பார்சல்களை அனுப்பு பார்க்கலாம். 

இருப்பினும் ஒரே முகவரிக்கு இத்தனை பார்சல்களை அனுப்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இறுதியில், ஏதாவது விற்பனையாளர் தன்னுடைய விற்கப்படாத பொருட்களை அப்புறப்படுத்த இப்படி செய்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com