பணி நீக்க ஜுரம் வைரலாகப் பரவுகிறது
ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய கையோடு ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறார் எலான் மஸ்க். இந்தியாவில் செயல்பட்டு வரும் ட்விட்டரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்குத் தப்பவில்லை.
இதற்குக் காரணம், இதுவரை ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும் செலவை குறைக்கும் விதமாகவும் 11,000 ஊழியர்களை நீக்கப் போவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் தான் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனம் ஆகும்.
“மெட்டாவின் வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்களை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 13% குறைக்கவும், 11,000 க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்” என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
இந்த முடிவானது அனைவருக்கும் கடினமானது என்பதை நான் அறிவேன், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
“பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு 16 வாரங்களுக்கான அடிப்படை ஊதியம் உள்ளிட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்” என்றும் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.