முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 11வது அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 11வது அமைச்சரவை கூட்டம்!
Published on

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 11வது அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 11ஆவது கூட்டம். இன்று தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். சட்டமன்ற கூட்டத்தொடரில் செயலாற்றுவது குறித்த அறிவுறுத்தல்களை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். ஆய்வுக்கூட்டங்களில் கிடைத்த கருத்துகள் அடிப்படையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த தனது கருத்துகளையும் இக்கூட்டத்தில் முதலமைச்சர் முன்வைக்க இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த நிதியாண்டில் வரப்போகின்ற பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த ஆலோசனைகளை அமைச்சரவையில் விவாதிக்க பட உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.

தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் அமைச்சரவை இன்று கூடுகிறது. மார்ச் 20ம் தேதி சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், நிதி நிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யும் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், மீண்டும் சட்டத்தை இயற்றுவது குறித்தும் முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்க பட உள்ளது.. அதில், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ இரயில் திட்டம், தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கும் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com