தூத்துக்குடி பிரசாரத்தில் விதிமுறைகளை மீறியதாக விஜய் மீது 12 வழக்குகள் பதிவு..!

VIJAY
VIJAYSource:indiatoday
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தவெக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி தூத்துக்குடியில் அதன் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு விஜயை பார்க்க ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அதிகமாக திரண்டதால் அப்பகுதியில் மிகப்பெரிய கூட்டம் கூடியது.

ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் எனவும் அதற்கு மாற்று அரசியல் தேவை போன்ற கருத்துகளை வலியுறுத்தி இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால் முக்கியமான கூட்டமாக இந்த பரப்புரை தவெகவினருக்கு உற்சாகம் தந்தது.

எனினும் எப்போதும் அவர் பின்னால் பைக்குகளில் செல்லும் ரசிகர்களால் சில அசம்பாவிதங்கள் நிகழ்வது போலவே இங்கும் விஜயின் பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்த சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது விபத்து ஏற்பட்டு 7 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியானது.

முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் அவரது கட்சிக்கு தூத்துக்குடி பிரச்சாரம் முக்கியமாக பார்க்கப்பட்டு இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதிய நிலையில் விதிமுறைகளை மீறியதாக தற்போது விஜய் மீது 12 வழக்குகள்  போடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ தொடர்பாக இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன. இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றது , அனுமதிக்கப்படாத இடங்களில் கட்சி கொடி பயன்படுத்தியது உள்ளிட்ட  12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று செல்லவிருந்த கடலூர் பிரச்சாரத்தை திடீரென விஜய்  ரத்து செய்திருப்பதற்கும் இந்த வழக்குகள் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குபுகுபுவென புகையை கக்கிய VVPAT எந்திரம்- புதுச்சேரி வாக்குப்பதிவு மையத்தில் திடீர் பரபரப்பு..!
VIJAY
logo
Kalki Online
kalkionline.com