12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியது!

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியது!

தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன . அமைச்சர் அன்பில் மகேஷ் , அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகம் என அமைச்சர் அன்பில் மகேஷ்' தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள், http://www.tnresults.nic.in,

http://www.dge1.tn.nic.in , 

 http://www.dge2.tn.nic.in ,  

http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக, தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு களை அறிந்து கொள்ளலாம்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர்.

கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வரை நடைபெற்ற தேர்வு தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இந்த தேர்வின் முடிவுகளை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். இன்று காலை 9:30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும் மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தங்கள் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்ச்சி விகிதம் – 97%

மாணவியர் தேர்ச்சி – 96.38%

மாணவர்கள் தேர்ச்சி – 91.45%

அரசு பள்ளிகளில் – 89.80%

அரசு உதவி பெறும் பள்ளிகளில் – 95.99%

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com