காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் மூவர்ணக் கொடி பேரணி!

காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் மூவர்ணக் கொடி பேரணி!
Published on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் மூவர்ணக் கொடி பேரணி நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற லோக்சபாவில் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம், அதானி குழும விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கேள்விய எழுப்பியது . இந்த விவகாரம் குறித்து இன்றும் அமளி நீடித்தது. காங்கிரஸ் எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து வந்தனர். லோக்சபா தொடங்கிய உடன் சில காங்கிரஸ் எம்பிக்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்றனர். சிலர் தங்களது இருக்கைகள் மீது நின்று முழக்கங்களை எழுப்பினர். மேலும் சில எம்பிக்கள் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்று முழக்கமிட்டனர். இதனையடுத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டு தேசிய கொடி ஏந்தி மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் மூவர்ணக் கொடி பேரணி நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி, விஜய் சவுக் வரை சென்றது. மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ''ஜனநாயகம் குறித்து நரேந்திர மோடி அரசு நிறைய பேசுகிறது. ஆனால், அவர்களின் செயல்களில் அது பிரதிபலிப்பதில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார். அதன் பிறகும் அவர் தனது லண்டன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. அவர்களின் செயல், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதாக உள்ளது.

பழைய ரயிலில் புதிய இன்ஜினை மாற்றிவிட்டு அதற்கு விழா எடுக்கிறார்கள். அதில், பிரதமர் மோடி பங்கேற்று மிக நீண்ட உரையை நிகழ்த்துகிறார். ரயில் தொடக்க விழாவுக்கு பிரதமர் செல்ல வேண்டுமா? அவர் என்ன அந்த தொகுதியின் எம்.பி.யா?'' என கேள்வி எழுப்பினார்.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com