பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங்கில் 13 பேர் விலகல்!

பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங்கில் 13 பேர் விலகல்!
Published on

பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவைச் சேர்ந்த 13 பேர் அக்கட்சியில் இருந்து விலகினர். முன்னாள் பாஜக ஐடி விங் செயலாளர் நிர்மல் குமார் வழியில் பயணிக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி முன்னாள் பாஜக ஐடி விங் செயலாளர் நிர்மல் குமார் மற்றும் திலீப் கண்ணன் ஆகியோர் அடுத்தடுத்து விலகிய விட்டனர். இவர்கள் இருவரும் அதிமுகவில் இணைந்து விட்டனர். இந்த நிலையில், தற்போது இந்த மேற்கு மாவட்ட ஐடி பிரிவைச் சேர்ந்த 13 பேர் கூண்டோடு விலகியது பிஜேபி கட்சியில் பரபரப்பை எற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட தலைவர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியில் சில காலமாக அசாதாரன சூழ்நிலை நிலவி வந்த நிலையில் ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது.

ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான் கிடைத்துள்ளது. பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்களுக்கு அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நான் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரம் ஆகவே இதை செய்கின்றேன். நிச்சயமாக தி.மு.க-வில் இணையமாட்டேன். திமுக-வை விமர்சிக்கவே பாஜக-வில் இருந்து விலகுகிறேன். தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள்.

என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர் C.T.R நிர்மல் குமாருடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார். இதில் இந்த மாவட்டத்தின் 2 துணைத்தலைவர்கள் உட்பட 13 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com