
நாட்டு மக்கள் அனைவரையும் காங்கிரஸுக்கு ஆதரவாக ஒன்று திரட்டும் நோக்கில் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அந்த வகையில் 14-வது நாளாக அவரது நடைபயணம் இன்று கேரளாவில் நடைபெற்று வருகிறது.
-இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது;
ராகுல் காந்தி தனது ‘பாரத் ஜோடோ யாத்ரா’வை 13-வது நாளாக நேற்று ஆலப்புழா மாவட்டம் மயித்தாரா பகுதியிலிருந்து தொடங்கினார். அப்போது வழியில் செயின்ட் மைக்கேல் கல்லூரி வளாகத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டார். காலையில் தொடங்கிய பயணம் 14 கிலோமீட்டர் தூரம் சென்று குத்தியாதோடு பகுதியில் நிறைவடைந்தது.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் இன்று ராகுலின் 14-வது நாள் பயணம் தொடர்கிறது. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன், பவன் கேரா, வி.டி. சதீஷன் உள்ளிட்டோர் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது..