அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 நீதிமன்ற காவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15  நீதிமன்ற காவல்!
Published on

சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 15 காவலில் அவர் நீதிமன்ற காவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காவல் மருத்துவமனை காவலாக தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

செந்தில் பாலாஜி விவாகரம் தொடர்பாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் சட்ட விரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ, நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் முறையிட்டனர். வழக்கு பிற்பகல் 2:15 மணிக்கு விசாரிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அமர்வில் இருந்த இரு நீதிபதிகளில் நீதிபதி சக்திவேல் விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.

புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.

அதன்படி நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான அமர்வில் நீதிபதி சக்திவேல் விலகியதால் அந்த இடத்திற்கு உயர்நீதிமன்ற நடைமுறைப்படி வேறோரு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை வேறோரு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று இருப்பதாகவும், இது குறித்து மருத்துவமனையில் உள்ள அமலாக்கத்துறையினரிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வழக்கறிஞர்கள் வருகை தந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ரிமாண்ட் செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில் நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு வந்து செந்தில் பாலாஜியை சந்தித்தார்.நீதிமன்றத்தில் வாதங்கள் வைத்துக் கொள்ளலாம் என நீதிபதி அல்லி தெரிவித்தார். மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் உடல்நிலை குறித்து தான் விசாரித்து வருகிறோம் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்தார். இந்த நிலையில் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்

. இதன்பிறகு அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற அமர்வு அறிவித்தது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் இந்த காவல் மருத்துவமனை காவலாக தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திமுக சட்ட வல்லுனர் இளங்கோவன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com