துபாய் அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் மரணம், 9 பேர் காயம்!

துபாய் அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் மரணம், 9 பேர் காயம்!
Published on

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயின் பழைய சுற்றுப்புறத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் மரணமடைந்தனர் மேலும் 9 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

விபத்து குறித்த உறுதியான தகவல்களுக்கு தி நேஷனல் செய்தித்தாள், துபாய் ஊடக அலுவலகத்தால் வழங்கப்பட்ட துபாய் சிவில் டிஃபென்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டியது.

துபாயின் அல் ராஸ் சுற்றுப்புறத்தில் சனிக்கிழமையன்று தீ விபத்து ஏற்பட்டது, அதன் பழமையான சுற்றுப்புறங்களில் ஒன்றான இப்பகுதியில் தெருக்கள் மற்றும் சந்துகள் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன.

துபாய் க்ரீக்கிற்கு அருகிலுள்ள முக்கிய சுற்றுலாத்தலமான துபாய் மசாலா சந்தையும் அல் ராஸில் உள்ளது. ஊடகங்களின் கருத்துக்கான கோரிக்கைக்கு அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை.

அரசாங்க அறிக்கை விபத்துக்கான எந்த ஒரு காரணத்தையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால் மரணத்திற்கு வழிவகுத்த ஐந்து அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு பிரச்சனையை சுட்டிக்காட்டியது. அதாவது;அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்கள், வணிக வளாக கட்டிட உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் குடியிருப்பாளர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் வழிகாட்டிகள் போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும், அதன் முக்கியத்துவத்தை உணரவேண்டும் என்று அரசாங்க அறிக்கை வலியுறுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com