
இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில், நேற்று (செவ்வாய்) மாலை ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் ஒரு தனியார் பேருந்து சிக்கிக் கொண்டது. அரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து பிலாஸ்பூர் அருகே உள்ள குமர்வினுக்குச் சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் சுமார் 35 பயணிகள் வரை பயணம் செய்தாக கூறப்படுகிறது. கடுமையான கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நிலச்சரிவு முழு பேருந்தின் மீது விழுந்து மூடியது. இந்த சூழலில் பேருந்து முழுவதும் நிலச்சரிவில் சிக்கி விபத்துக்குள்ளாகியது.
ஜான்டுட்டா அருகில் உள்ள பாலுகாட் பகுதியில் உள்ள பல்லு பாலம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர் , இருவர் காயமடைந்துள்ளனர். மொத்த பயணிகளின் எண்ணிக்கை இதுவரை சரியாக தெரியவில்லை. மலை இடிந்து பேருந்தின் மீது விழுந்ததால் , அந்த வாகனம் மொத்தமாக நொறுங்கியுள்ளது.
அங்குள்ள நிலச்சரிவுகள் மற்றும் இடிபாடுகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்ட நிர்வாகம் காவல்துறை ,மாநிலப் பேரிடர் மீட்பு படை ஆகியவை சம்பவ இடத்திலிருந்து மீட்பு பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. மேலும் அந்த இடத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்வதால் மீட்பு பணிகளில் சிறிது தாமதம் நிலவுகிறது. கிடைத்த தகவல்களில் அடிப்படையில் 8 வயது சிறுவன் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரி சந்தீப் தவால் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்து உள்ளார்.மீட்பு பணிகளில் 5 வயதுள்ள ஒரு சிறுமியும் 12 வயது நிரம்பிய சிறுவனும் மீட்கப்பட்டு அருகில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
இந்த சம்பவம் பற்றி பிலாஸ்பூர் எஸ்பி சந்தீப் தவால் " பேருந்து விபத்து சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்ததும் போலீஸ் மீட்பு குழு , தீயணைப்புத் துறை , ஊர்க்காவல் படை மீட்புக் குழு ஆகியோருடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டோம். இந்த மீட்பு பணிகளில் உள்ளூர் மக்களும் பங்கு கொண்டு 2 குழந்தைகளைக் காப்பாற்ற உதவினர்".என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து விபத்து சம்பவம் குறித்து இந்திய ஜானதிபதி மாண்புமிகு திரவுபதி மூர்மூ "இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலர் இறந்த செய்தி மிகவும் துயரமானது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று அவரது X பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர்
அலுவலக அறிக்கையில் "இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்து வருத்தமளிக்கிறது. இந்த கடினநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தனது எனது எண்ணங்கள் இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.